201610031124554419 how to make tulsi tea SECVPF
ஆரோக்கிய உணவு

சுவையான ஆரோக்கியமான துளசி டீ

சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் இந்த துளசி டீயை போட்டு குடித்தால் இதமாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான ஆரோக்கியமான துளசி டீ
தேவையான பொருட்கள் :

துளசி – 1 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 ஸ்பூன்
தேன் அல்லது கருப்பட்டி – சுவைக்கு
பால் – தேவைக்கு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் துளசி இலையை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

* அடுத்து டீத்தூள், கருப்பட்டியை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டவும்.

* தேவையான அளவு பாலை ஊற்றி பருகவும்.

* சுவையான ஆரோக்கியமான துளசி டீ ரெடி.

* தேன் பயன்படுத்துவதாக இருந்தால் குடிக்கும் போது தேன் சேர்த்தால் போதுமானது. பால் சேர்க்காமலும் இந்த டீயை அருந்தலாம்.

பலன்கள்: துளசியில் ஆக்சிஜன் அதிக அளவு இருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. அதிகமான வியர்வையைக் கட்டுபடுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். முகப்பொலிவுக் கூடும்.201610031124554419 how to make tulsi tea SECVPF

Related posts

எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது….

sangika

வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி அரிசி – மூன்றில் எது நல்லது??

nathan

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி

nathan

தினமும் காலை பார்லி கஞ்சி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்க முந்திரியை அறவே தொட கூட வேண்டாம்!

nathan

இஞ்சி கற்றாழை ஜூஸ்

nathan

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

nathan

சுவையையும் ஆபத்தையும் சேர்த்து தரும் அஜினோமோட்டோ.

nathan

மரவள்ளி கிழங்கு நன்மைகள் – maravalli kilangu benefits

nathan