அசைவ வகைகள்

சுவையான வஞ்சிரம் மீன் கிரேவி

வஞ்சிரம் மீனில் கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான வஞ்சிரம் மீன் கிரேவி
தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன் – 500 கிராம்,
சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி – தலா 200 கிராம்,
பெரிய வெங்காயம், பூண்டு, புளி – தலா 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4,
கறிவேப்பிலை – சிறிதளவு,
நல்லெண்ணெய் – 100 மி.லி,
வெந்தயம் – சிறிதளவு
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
கடுகு, சோம்பு – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தனியா – 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் – அரை கப்

செய்முறை :

* பெரிய வெங்காயத்தை அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும்.

* வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* புளியை கரைத்து வைக்கவும்.

* தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தைப் போட்டுப் பொரிக்கவும். வெந்தயம் பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* பிறகு, மிளகாய்த் தூள், தனியா, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பின்னர், அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும்.

* புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும்.

* பிறகு, மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். இறக்கும் முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.

* வஞ்சிரம் மீன் கிரேவி ரெடி.

பலன்கள்: எண்ணெயில் பொரிக்காமல், மீன்களை வேகவைத்துச் சாப்பிடுபவர்களுக்கு, மூளை செல்களின் வளர்ச்சி அதிகரித்து, நினைவு ஆற்றல் திறன் மேம்படும். 201610031004306595 vanjaram fish gravy SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button