மருத்துவ குறிப்பு

வீட்டுக்கு தேவை வெளிச்சம்

அழகு தரும் விளக்கு அலங்காரம்

ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு வண்ணம் மட்டுமல்ல,.. நம் எண்ணத்தையும் மாற்றக்கூடிய சக்தி அவற்றுக்கு உண்டு. நாம் அன்றாடம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாவற்றிலும் ஏராளமான வண்ணங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் நம் வாழ்வில் ஒரு பங்கு உள்ளது. ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்கள் குணத்தையும் கணிக்க இயலும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். அந்த அளவுக்கு நிறங்கள் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

வண்ணங்களையும், விளக்கு அலங்காரங்களையும் கொண்டே ஒரு அறையின் அழகு வெளிப்படுகிறது. வீட்டின் உள் அலங்காரங்களில் விளக்குகளும், வண்ணங்களும் பிரதான பங்கு வகிக்கின்றன. வண்ணங்கள் சுவர்களுக்கு அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி தருவதுடன் மனதுக்கு புத்துணர்ச்சியையும், அமைதியையும் உருவாக்கும் தன்மை கொண்டது.

முதன்மை விளக்குகள்

வீட்டின் உள் அலங்காரங்களில் அறையின் அழகை மெருக்கேற்றுபவை விளக்குகள். பகல் நேரங்களில் வீட்டின் அழகை உயர்த்தியும், இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளிச்சத்தினை வழங்கவும் செய்கின்றன. வீட்டினை பிரகாசமாக்கும் விளக்குகள் ஓரங்கட்டப்பட்டு வீட்டிற்கு குறைவான வெளிச்சத்தினை வழங்கும் விளக்குகள் தற்போது பிரபலமாகி வருகின்றன.

டிம் லைட்டிங்

‘டிம் லைட்டிங்’ என்பது வீட்டின் அறைகளுக்கு பிரகாசமான வெளிச்சத்தை வழங்காமல் கலைநயமாக வெளிச்சத்தை மந்தமாக வழங்குவதாகும். டிம் லைட்டிங் முறைகளை பெரும்பாலும் அருங்காட்சியகங்கள், கலை அரங்கங்களில் பார்த்திருக்கலாம். பெரிய அறையாக இருந்தாலும் தேவைக்கு ஏற்ப குறைவான வெளிச்சத்தை தரும் விளக்குகளை அமைத்து பராமரிப்பார்கள். இந்த டிம் லைட்டிங் முறை தற்போது பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடுகள்

டிம் லைட்டிங் முறைகளை வீட்டின் மூலை முடுக்குகளில் பயன்படுத்துவதால் மின்சார செலவு குறைக்கப்படுகிறது. மேலும் விளக்குகள் மிதமான வெளிச்சத்துடன் ஒளிர்வதால் மற்ற பிரம்மாண்டமான விளக்குகளுக்கு செலவழிக்கும் பணத்தினை மிச்சப்படுத்த முடியும். மேலும் கலை நயமான விளக்கு ஒளி என்பதால் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் கலை பொருட்களும் பிரம்மாண்டமாக தெரியும்.

ஓவிய விளக்குகள்

டிம் லைட்டுகளை பெரும்பாலும் ஓவியங்களில் வெளிச்சத்தை படரவிடும் விளக்குகளாக பயன்படுத்துகின்றனர். இதனை முதன்மை விளக்குகளாக பயன்படுத்துவதால் வீட்டின் அமைப்பு கலைநயமாக தோன்றமளிக்கிறது. மேலும் வீட்டினை அலங்கார பொருட்களை கொண்டு அலங்கரிப்பதற்கு மாற்றாக இதுபோன்ற டிம் விளக்குகளை ஒளிர செய்து வீட்டினை அலங்கரிக்கின்றனர்.

உபயோகப்படுத்தும் முறைகள்

சாதாரண விளக்குகளை போன்றே இந்த விளக்குகளையும் பயன்படுத்தலாம். இதனை பராமரிப்பது மிகவும் எளிமையானதாகும். டிம் விளக்குகளில் மின்சாரத்தினை சேமிக்கும் வகையிலான விளக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சாதாரண விளக்குகளை விட அதிகமான மின்சிக்கனத்தினை இந்த விளக்குகள் தருகின்றன.

வரவேற்பறை விளக்குகள்

வீடுகளின் நுழையும் நண்பர்களும் விருந்தினர்களும் வந்தமர்வது வரவேற்பறையிலேயே. ஆகவே இங்கு ரம்மியமான ஒளி படர்ந்திருந்தால் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு சந்தோஷமான உணர்வு கிடைக்கும். மிதமான வெளிச்சம் தரத்தக்க விளக்குகளை இந்த அறையில் இடம்பெறச் செய்ய வேண்டும். கலைநயமிக்க அலங்காரமான விளக்குகளை இங்குப் பொருத்தினால் நமது ரசனை வெளிப்படும்.

பிற விளக்குகள்

படுக்கையறையில் மெல்லிய வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகள் அமைய வேண்டும். மனதுக்கு அமைதி தரும் வகையிலான வண்ணத்தில் ஒளியைப் படரவிடும் விளக்குகளை இங்கே பொருத்த வேண்டும். குறைந்த ஆற்றலிலும் அதிக வெளிச்சம் தரும் சிஎஃப்எல் பல்புகளைக் குளியலறையில் பொருத்தலாம்.

வீட்டில் நாம் மேற்கொள்ளும் அன்றாட வேலைகளைச் சிரமின்றி செய்ய ஏதுவாக வீட்டில் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் வீட்டில் இடம்பெறும் நேர்த்தியான விளக்குகள் வீட்டின் தோற்றத்தைக் கவர்ச்சிகரமானதாக மாற்றும். தகுந்த விளக்குகள் வீட்டில் பொருத்தப்பட்டால் போதும் நமது அன்றாட வேலைகளைத் திறமையுடன் மேற்கொள்ள இயலும். விளக்கின் வெளிச்சம் அறைக்கு அழகையும் மனத்திற்கு நிம்மதியையும் தரும்.

இவையெல்லாம் சரி. மின்சாரச் செலவைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவசியமற்ற நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட வேண்டும் என்பது இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் குறைந்த வெப்பத்தை வெளியிடக் கூடிய லெட் என்று அழைக்கப்படும் எல்ஈடி பல்புகள் எரிசக்தியை சேமிக்கக் கூடியது மட்டுமல்ல. சாதாரண பல்புகளை விட அதிக நாள் உழைக்கக் கூடியதாகும். இவற்றின் பயன்பாடும் தற்போது அதிகரித்துள்ளது.

மஞ்சள் விளக்குகள்

வெளிச்சத்தை வைத்தும் வீட்டுக்குப் புதுப்பொலிவை கொண்டுவரமுடியும். மென்மையான மஞ்சள் நிற விளக்குகளை வீட்டில் பொருத்துவதன் மூலம் வீட்டின் மொத்தத் தோற்றத்தையும் மாற்றலாம். இந்த மஞ்சள் விளக்குகளின் வெளிச்சம் எல்லாப் பொருட்களையும் அழகாக்கிக் காட்டும். இந்த மஞ்சள் நிறத்தை பல்வேறு விதமாகவும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, ஒரு அறையில் மென்மையான மஞ்சள் விளக்குகளைப் பொருத்தலாம். அதற்கு நேரெதிராக இருக்கும் அறையில் அடர் மஞ்சள் நிற விளக்குகளைப் பயன்படுத்தலாம். இது ஒருவிதமான புதுப்பொலிவை வீட்டுக்குக் கொடுக்கும்.Dmd5zbI

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button