சிற்றுண்டி வகைகள்

தந்தூரி பேபி கார்ன்

குழந்தைகளுக்கு பேபி கார்ன் மிகவும் பிடித்தமான ஒன்று. குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும், பேபி கார்னை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் அதனை மசாலா, ப்ரை செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இங்கு அந்த பேபி கார்ன் கொண்டு எப்படி தந்தூரி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டில் பேபி கார்ன் இருந்தால், இன்று தந்தூரி பேபி கார்ன் செய்து சுவையுங்கள். சரி, இப்போது அந்த தந்தூரி பேபி கார்ன்னின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: பேபி கார்ன் – 10 எண்ணெய் – 2-3 டீஸ்பூன்

மசாலாவிற்கு… தயிர் – 3/4 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1/4 டீஸ்பூன் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் தந்தூரி மசாலா – 1/4 டீஸ்பூன் சாட் மசாலா – 1/4 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் ஓமம் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு மஸ்லின் துணியில் தயிரை ஊற்றி கட்டி, 30 நிமிடம் தொங்க விடவும். பின் பேபி கார்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிக்கும் போது, அதில் பேபி கார்னை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு, வேண்டிய அளவில் நீளமான துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் துணியில் கட்டிவிடப்பட்டுள்ள தயிரை போட்டு, அத்துடன் மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் பேக்கிங் ட்ரேயில், அலுமினிய பேப்பரை விரித்து, அதில் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். பிறகு மைக்ரோ ஓவனை 200 டிகிரியில் சூடேற்றிக் கொள்ளவும். பின் ஒவ்வொரு பேபி கார்னை மசாலாவில் பிரட்டி, அலுமினிய பேப்பரில் வைத்து, ஓவனில் 15 நிமிடம் வைத்து எடுத்து, பின் கிரில் நிலையில் மாற்றி 4 நிமிடம் க்ரில் செய்து எடுத்தால், தந்தூரி பேபி கார்ன் ரெடி!

குறிப்பு: ஒருவேளை உங்கள் வீட்டில் மைக்ரோஓவன் இல்லாவிட்டால், தவாவில் எண்ணெய் தடவி, அதன் மேல் மசாலாவில் தடவிய பேபி கார்னை வைத்து, நன்கு ப்ரை செய்து எடுக்கலாம்.

tandoori baby corn 04 1451910691

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button