மருத்துவ குறிப்பு

குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்

குழந்தைகளை குறிவைக்கும் ஆபாசத்தை தடுப்பது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்
தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த தலைமுறை குழந்தைகள் தொழிநுட்பத்திற்கு அடிமையாகியே வளர்கின்றனர்.

தொழில்நுட்பத்தை பெரிதும் விரும்பும் இவர்கள் அந்த கால குழந்தைகள் போல் ஓடி ஆடி விளையாடுவதை விரும்புவதில்லை. மாறாக மொபைல் போனிலும், டாப்லெட்டிலும் வீடியோ கேம்களை விளையாடி மகிழ்கின்றனர்.

சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம், 5 முதல் 15 வயதுக்குட்பட்ட 94 சதவீத குழந்தைகள் வீட்டில் இண்டர்நெட் வசதி அவர்களுக்காக ஏற்படுத்தபட்டுள்ளது. அதிலும், 3, 4 வயது குழந்தைகள் இணையத்தில் பூந்து விளையாடும் திறன் உள்ளவர்களாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனால் ஆபத்தும் அவர்களை எந்த நேரமும் சூழ்ந்து கொண்டே இருக்கிறது. சமூக வலைதள ஆபத்து, கொட்டிக் கிடக்கும் ஆபாசம், தனிமையை விரும்புதல் என அவர்கள் தடம்மாறும் வாய்ப்பை பெற்றொர்களே உருவாக்கி கொடுக்கின்றனர்.

இணையம் இந்த காலக்கட்டத்தில் எவ்வளவும் முக்கியம் என்பதை அறியும் பெற்றோர்கள், அதை முறையாக பயன்படுத்த தனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்க கூடாது.201610050840162810 Internet danger for children SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button