தலைமுடி சிகிச்சை

கூந்தலை வளரச் செய்யும் மூன்று இயற்கையான கண்டிஷனர்

கூந்தல் நீண்டு வளர்வதற்கு தரமான எண்ணெய் மற்றும் ஷாம்பு எப்படி முக்கியமோ, அதேபோல் கண்டிஷனரும் கூந்தலுக்கு தேவை.

ஏனெனில் எண்ணெய் கூந்தலின் வேர்கால்களை தூண்டி வளரச் செய்யும். ஆனால் அவற்றை போஷாக்குடன் வளரச் செய்ய கண்டிஷனர் தேவை. இல்லையெனில் எவ்வளவுதான் முடி வளர்ந்தாலும் எளிதில் பலமிழந்து உதிர்ந்துவிடும்.

கண்டிஷனர் என்பது கடைகளில் வாங்குவதை பற்றி சொல்லவில்லை. கூந்தலுக்கு போஷாக்கினையும் ஈரப்பத்தையும் தரும் எளிய பொருட்களைத்தான். அப்படியான 3 கண்டிஷனரை இப்போது எப்படி நாமே வீட்டில் தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் – சில துளிகள்

இவை எல்லாவ்ற்றையும் கலந்து தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை போடுங்கள். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசுங்கள். இவை கூந்தலில் உள்ள வறட்சியை போக்கிவிடும். ஈரப்பதத்தி தரும். பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்கும்.

தேங்காய் பால் கண்டிஷனர் : தேங்காய் பால் – கால் கப் தேன் – 2 டேபிள் ஸ்பூன் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1 ரோஸ் வாட்டர் — சில துளிகள் கிளிசரின் – சில துளிகள்

முதலில் இங்கு குறிப்பிட்டுள்ள எல்லா கலவைகளையும் கலக்க வேண்டும். கடைசியாக விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து அதிலிருக்கும் திரவத்தை ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனை தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, முடியின் நுனி வரை போட்டு, தலையை ஒரு பாலிதின் கவரால் மூடி விடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.

இது மிகச் சிறந்த கண்டிஷனர். கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். வாரம் ஒரு முறை செய்தால் உங்கள் கூந்தலின் அழகை பார்த்து நீங்களே ரசிப்பீர்கள்.

தேங்காய் பால் பாதாம் எண்ணெய் கலவை : தேங்காய் பால்-1 டேபிள் ஸ்பூன் தேன்-1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய்-சில துளி ரோஸ் வாட்டர்- சில துளி பால் – 1 டேபிள் ஸ்பூன்

இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் தலையில் ஊற விடுங்கள்.

பின் நீரில் அலசவும். வாரம் தவறமால இப்படி செய்தால் முடி உதிர்தல் பொடுகு ஆகிய பிரச்சனைகள் நீங்கி, கூந்தல் அழகாய் ஜொலிப்பதை நீங்கள் உணரக் கூடும்.

மேலே சொன்ன எல்லாமே புரோட்டின் நிறைந்த பொருட்கள். இவை கூந்தல் வளரத் தேவையான போஷாக்கினை வேர்க்கால்கள் மூலம் அளிக்கும். வறண்டகூந்தல் பெற்றிருப்பவர்களுக்கு, அரிப்பு, எரிச்சல் முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படாது. கூந்தல் பட்டு போன்று மிளிரும்.

5 14 1465902095

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button