ஆரோக்கியம் குறிப்புகள்

உணவு சாப்பிட்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவை

உணவு சாப்பிட்ட பின் கண்டிப்பாக செய்யக்கூடாத செயல்கள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

உணவு சாப்பிட்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவை

உண்ணும் உணவுகளால் பலனைப் பெற வேண்டுமானால், உணவு உண்ட பின் செய்யும் பழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் நம்மில் பலர் உணவு உண்ட பின் செய்யக்கூடாத செயல்களை அறியாமல் செய்து வருகின்றனர். எனவே மதிய உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத செயல்களை பார்க்கலாம்.

பொதுவாக சிகரெட் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிலும் ஒரு சிகரெட் புற்றுநோயை உண்டாக்கும் 60 கார்சினோஜென்களைக் கொண்டிருக்கும். இத்தகைய சிகரெட்டை உணவு உட்கொண்டதும் பிடித்தால், அது 10 சிகரெட்டைப் பிடித்ததற்கு சமம். எனவே இப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

உணவு உட்கொண்ட பின் பழங்களை சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்தி, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும். பழங்களை சாப்பிட சிறந்த நேரம் என்றால் அது காலை வேளையில் தான்.

டீயில் உணவில் உள்ள எசன்ஸை உறிஞ்சும் பொருள் உள்ளது. அதுவும் டீயில் உள்ள டானின் என்னும் பொருள், உண்ட உணவில் உள்ள புரோட்டீனை உடல் உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் டீயை ஒருவர் உணவு உட்கொண்டதும் குடித்தால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.

குளிர்ச்சியான நீரை உணவு உட்கொண்ட பின் குடித்தால், உண்ட உணவு செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எனவே குளிர்ச்சியான நீரைக் குடிப்பதைத் தவிர்த்து, சூடான நீரைக் குடியுங்கள். இதனால் உணவில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.

உணவு உண்டதும் தூங்கினால், இரைப்பையில் உற்பத்தியாகும் செரிமான நீர் அப்படியே உணவுக்குழாய் வழியே மேலே எழும்பி, நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படக்கூடும். எனவே இப்பழக்கத்தையும் கைவிட வேண்டியது அவசியம்.

உணவு உண்டதும் குளித்தால், வயிறு மற்றும் செரிமான மண்டலத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, அவற்றில் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும்.

உணவு உண்பதற்கு முன் நீரைக் குடித்தால், அது உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தாமதப்படுத்தும்.201610061301549026 Dont must after eating SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button