ஆரோக்கிய உணவு

சர்க்கரை நோயாளிகளுக்கான ஓட்ஸ் புட்டு

மிகவும் சுவையான, சத்தான ஓட்ஸ் புட்டு காலை உணவுக்கு ஏற்ற புட்டு இது. குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கான ஓட்ஸ் புட்டு
தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – ஒரு கப்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
முந்திரித் துண்டுகள் – சிறிதளவு,
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஓட்ஸ்ஸை போட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.

* அடுத்து அதில் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் இரண்டு முறை சுற்றி எடுக்கவும்.

* சிறிது நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்து அதன் மேல் தூவவும்.

* ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய சத்தான அசத்தல் புட்டு ரெடி.

* சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களை இதை சாப்பிடலாம்.201610061054189935 oats puttu for Diabetics SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button