சிற்றுண்டி வகைகள்

சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கான சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :

அரிசி – 1/5 கப்
பாசிப் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
தேங்காய் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
நீர் – தேவையான அளவு

செய்முறை :

* பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்

* அரிசியை 3 மணி நேரங்கள் ஊற வைத்து நீரை வடித்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வறுத்து வைத்துள்ள பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில நீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

* கொழுக்கட்டை வெந்ததும் அதனை எடுத்து பரிமாறவும்.

* சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை ரெடி.

* இந்த கொழுக்கட்டை வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.201610060911451385 dal rice kolukattai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button