சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கான நூடுல்ஸ் – கார்ன் கட்லெட்

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு பிடித்த நூடுல்ஸை வைத்து கட்லெட் செய்வது எப்படி பார்க்கலாம்.

குழந்தைகளுக்கான நூடுல்ஸ் – கார்ன் கட்லெட்
தேவையான பொருட்கள் :

பச்சை பட்டாணி – கால் கப்
கார்ன் – கால் கப்
கடலை மாவு – 2 ஸ்பூன்
நூடுல்ஸ் – 1 1/2 கப்
சீரக தூள் – அரை ஸ்பூன் ( வறுத்து பொடித்தது)
உப்பு – சுவைக்கு
பூண்டு விழுது – அரை ஸ்பூன்
கரம்மசாலா – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் (chilli flakes) – 1 ஸ்பூன்
துருவிய சீஸ் – அரை கப்
பால் – 2 ஸ்பூன்
பிரட் தூள் – தேவைக்கு
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை :

* பச்சை பட்டாணி, கார்ன் இரண்டையும் வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* நூடுல்ஸை வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பச்சை பட்டாணி, கார்ன், கடலை மாவு போட்டு நன்றாக கலக்கவும்.

* அடுத்து அதில் சீரகத்தூள், உப்பு, பூண்டு விழுது, கரம்மசாலா, மஞ்சள் தூள், கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் (chilli flakes), நூடுல்ஸ் போட்டு நன்றாக கலக்கவும்.

* நூடுல்ஸை உடையாமல் கலக்க வேண்டும்.

* கடைசியாக துருவிய சீஸ், பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* கலந்ததை உருண்டையாக பிடித்து வேண்டிய வடிவில் தட்டி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டி வைத்துள்ளவைகளை போட்டு இருபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான நூடுல்ஸ் – கார்ன் கட்லெட் ரெடி.

* எண்ணெயில் பொரிப்பதற்கு பதில் தோசைக் கல்லில் போட்டும் எடுக்கலாம்.201610071422104322 Noodles Corn cutlet for kids SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button