ஆரோக்கிய உணவு

காலையில் வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிங்க

முட்டைக்கோஸில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான சத்துக்களும் அதனால் கிடைக்கும் நன்மைகளும் அதிகமாக நிறைந்துள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிங்க
முட்டைக்கோஸை காய்களோடு சமைத்து சாப்பிடுவதை விட அதை ஜூஸ் செய்து சாப்பிடுவதால், அதிலுள்ள முழுமையான சத்துக்களையும் நம் உடல் உறிஞ்சிக் கொள்கிறது. எனவே தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முட்டைக்கோஸை ஜூஸ் செய்துக் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் இருப்பதால், எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இது குடலில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை அழித்து, குடல்புண் வராமல் தடுக்கிறது. முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள சத்துக்கள் சுவாசப் பாதையில் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

முட்டைக்கோஸில் உள்ள க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம் இருப்பதால், இந்த ஜூஸை காலையில் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. முட்டைக்கோஸில் சல்ஃபோரபேன் உள்ளது. எனவே இதனை ஜூஸ் செய்து குடித்தால், நம் உடம்பில் ஏற்படும் புற்றுநோய்களின் தாக்கம் வராமல் தடுக்கிறது.

முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பதால், நம் உடம்பில் ஏற்படும் ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், நம் உடம்பில் அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாவை அழித்து, அல்சர் பிரச்சனைகளை விரைவில் குணமாக்குகிறது.

உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நம் உடம்பில் உள்ள கல்லீரலை சுத்தம் செய்து, கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. முட்டைக்கோஸ் ஜூஸில் குளுக்கோஸினோலேட்டுகள் என்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலைத் தொற்றும் நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க்கிறது.201610070818045775 Cabbage juice drink morning on empty stomach SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button