முகப் பராமரிப்பு

தினமும் இரவில் படுக்கும் முன் இவற்றை செய்தால் சீக்கிரம் வெள்ளையாகலாம்!

யாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன் பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட இக்காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.

அதில் முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.

இங்கு அப்படி பழங்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த 3 அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் இரவில் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு காட்சியளிக்கலாம்.

சந்தனம்

அக்காலத்தில் பல அழகு பிரச்சனைகளுக்கு சந்தனம் பயன்படுத்தப்பட்டு வந்தது. சந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும். ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

துளசி

துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.1 fair skin 20 1466421348

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button