29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
கேக் செய்முறை

சாக்லெட் கப் கேக்

என்னென்ன தேவை?

மைதா 75 கிராம்,
கார்ன்ஃப்ளார் 10 கிராம்,
கோகோ பவுடர் 10 கிராம்,
புளிப்பில்லாத கெட்டித் தயிர் 105 கிராம்,
சர்க்கரை 75 கிராம்,
பேக்கிங் பவுடர் அரை டீஸ்பூன்,
பேக்கிங் சோடா கால் டீஸ்பூன்,
சாக்கோ சிப்ஸ் சிறிது,
ரீஃபைண்டு ஆயில் 45 கிராம்,
வெனிலா எசென்ஸ் முக்கால் டீஸ்பூன்,
உப்பு 1 சிட்டிகை,
தண்ணீர் 1 டேபிள் ஸ்பூன்,

எப்படிச் செய்வது?

மைதா, கார்ன்ஃப்ளார், கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, 2 முறை சலிக்கவும். சர்க்கரை, தயிர் சேர்த்து கிரீம் பதத்துக்கு அடிக்கவும். அதில் எண்ணெய், உப்பு சேர்த்து அடித்து, எசென்ஸ் சேர்க்கவும். இந்தக்கலவையில் மாவுக் கலவையை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும். அடித்துக் கலக்கக்கூடாது. கலவை இட்லி மாவு பதத்துக்கு இருக்க வேண்டும். ரொம்பவும் கெட்டித் தயிர் என்றால் 1 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கப் மோல்டுகளில் ஊற்றி, மேலே சாக்கோ சிப்ஸ் தூவி, ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் 15 முதல் 18 நிமிடங்களுக்கு 180 டிகிரியில் பேக் செய்யவும். ஆறிய பிறகே பரிமாறவும்.sl4666

Related posts

டயட் கேக்

nathan

எக்லெஸ் கேரட் கேக்

nathan

புளிக்கூழ் கேக்

nathan

ரிச்கேக் : செய்முறைகளுடன்…!

nathan

காபி  கேக்

nathan

அன்னாசி பழ கேக்

nathan

வெனிலா சுவிஸ் ரோல்

nathan

மைக்ரோவேவ் சாக்லேட் கேக்

nathan

பச்சை பட்டாணி கேக்: ஆரோக்கியமான சிற்றுண்டி செய்முறை

nathan