​பொதுவானவை

ஆரோக்கியம் தரும் முளைக்கட்டிய பச்சை பயிறு சுண்டல்

ஆரோக்கியம் தரும் முளைக்கட்டிய பச்சை பயிறு சுண்டல் இன்றைய காலகட்டத்தில், பல நோய் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்வது மிக முக்கியமானதாகும்.

கடைகளில் கிடைக்கும் பொருள்களையும், பேக்கட்டில் கிடைக்கும் நொறுக்கு தீனிகளையும் உட்கொண்டால் நமது உடலை பேணிகாப்பது கடினம் ஆகிவிடும்.

தேவையானப்பொருட்கள்:

முளைக்கட்டிய பயறு – 1 கப் (வேக வைத்தது)
மிளகாய் – 2
எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
எலுமிச்சம் பழச்சாறு – சிறிது
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் மிளகாய் (ஒன்றிரண்டாகக் கிள்ளி போடவும்), பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வறுத்து, அத்துடன் பயறு, உப்பு போட்டுக் கிளறி விடவும் கடைசியில் எலுமிச்சம் சாறு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.1453551664 5675

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button