சைவம்

தர்பூசணிப் பொரியல் செய்யலாம் வாங்க…..!

வகைவகையாக ருசியாகச் சாப்பிடுவதில் யாருக்குத்தான் ஆசை இருக்காது. அப்படி ஒரு அருமையான ருசியுடன் ஒரு கை பார்க்கலாம் புதிய டிஷ், தர்பூசணிப் பொரியல்.

சரி. இனி தர்பூசணிப் பொரியல் செய்வது எப்படி எனப் பார்க்காலம்…


முதலில் தர்பூசணியைச் சுத்தமான தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். தர்பூசணியின் வெளியோட்டினைத் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

குடமிளகாய், பூண்டு, இஞ்சி, தேவையான அளவு நறுக்கி வைத்துக் கொள்ளவும். தயிர் ஒரு கிண்ணம் மற்றும் தக்காளிச்சீவல், ஒரு பழம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கொள்கலனை அடுப்பில் வைத்துச் சூடேற்றவும். பின்பு சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் போட்டு எண்ணெய் காய்ந்து விட்டதென உறுதிப்படுத்திக் கொள்ளவும். பின்பு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய், தக்காளி, தர்பூசணியோட்டுச் சீவல் ஆகியவற்றை வரிசையாகச் சற்று இடைவெளி விட்டு, கொள்கலனில் இட்டு, இட்டு, வதக்கவும். தற்போது முட்டையை உடைத்து இடவும். பின்பு அந்தக் கிண்ணத்திலிருக்கும் தயிர் ஊற்றிக் கிண்டவும்.

தேவையான அளவு மிளகாய்த்தூள் இடவும். பின்பு, கொஞ்சமே கொஞ்சம் உப்பு இட்டு மிக மிதமான சூட்டில் ஐந்து மணித்துளிகள் மூடப்பட்ட கொள்கலனில் வேகவிடவும். தற்போது சுவைமிக்கத் தர்பூசணிப் பொரியல் தயார். கொஞ்சம் செய்துதான் பாருங்களேன். அதன் சுவையை ரசித்து ருசித்து உங்க நண்பர்களிடமும், உறவினர்களுடமும் சொல்லி மகிழுங்கள்.1435687875 1533

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button