சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல்

டயட்டில் உள்ளவர்கள், வயதானவர்கள் கோதுமை ரவையில் செய்த உணவுகளை அடிக்கடி செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல்
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
கறிவேப்பிலை – சிறிது
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
ப.மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
முந்திரி – 2
எண்ணெய் – 3 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கோதுமை ரவையை போட்டு லேசாக வறுக்கவும்.

* அடுத்து பாசிப்பருப்பையும் போட்டு லேசாக வறுக்கவும்.

* குக்கரில் 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து நன்கு கிளறவும்.

* ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் மிளகு, ப.மிளகாய், இஞ்சி, சீரகம் போட்டு தாளித்த, பின் முந்திரி, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.

* சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல் ரெடி.201610121153060031 Samba Godhumai Ven Pongal wheat rava Pongal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button