ஆரோக்கிய உணவு

பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல்

பித்த வாந்தி, வாய் கசப்பு உள்ளவர்கள் நார்த்தங்காய் இலை துவையல் அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல்
தேவையான பொருட்கள் :

நார்த்தங்காய் இலை – 20,
கறிவேப்பிலை இலைகள் – 10,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் – 4,
பச்சை மிளகாய் – ஒன்று,
புளி – கோலிகுண்டு அளவு,
உளுத்தம்பருப்பு – ஒரு கரண்டி,
சீரகம், கடுகு – தலா அரை டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

நார்த்தங்காய் இலைகளின் நடுவில் இருக்கும் காம்பை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நார்த்தங்காய் இலைகளை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.

* பின்பு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாயை போட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.

* வாணலியில் மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

* வறுத்த பொருட்கள், வதக்கிய நார்த்தங்காய் இலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாயுடன் உப்பு, புளி, தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான நார்த்தங்காய் இலை துவையல் ரெடி.

* இந்த நார்த்தங்காய் இலை துவையல் பித்த வாந்தி, வாய் கசப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
201610151116099889 narthangai leaf thuvaiyal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button