ஃபேஷன்

ஜொலி ஜொலிக்கும் கோல்டு எம்பிராய்டரி சுடிதார்

சுடிதார்கள் வட மாநிலத்தில் பெண்கள் அணிந்த ஆடையாக இருந்தாலும் இன்று இந்தியாவின் ஒட்டு மொத்த பெண்களுக்கான ஆடையாகவே உருவெடுத்துள்ளது.

ஜொலி ஜொலிக்கும் கோல்டு எம்பிராய்டரி சுடிதார்
பெண்களுக்கு புடவை அடுத்தபடியாய் அம்சமான ஆடை என்றால் சுடிதார்தான். முதலில் சுடிதார் போடுவது என்பது பல பெண்களுக்கு சற்று கடினமாக இருந்தது. இன்று சிறு பெண் குழந்தைகள் முதல் வயதான பாட்டி வரை அனைவருக்கும் சுடிதார்கள் அணிவது தான் சுகமான விஷயமாக உள்ளது. சுடிதார்கள் வட மாநிலத்தில் பெண்கள் அணிந்த ஆடையாக இருந்தாலும் இன்று இந்தியாவின் ஒட்டு மொத்த பெண்களுக்கான ஆடையாகவே உருவெடுத்துள்ளது. சுடிதார்கள் என்பது மேல் சட்டையாக குர்தா அதற்கேற்ற பேண்ட் இரண்டும் கலந்துதான். இதற்கு ஏற்ற மேல் துப்பட்டாவும் இணைப்பாக கிடைக்கும்.

பண்டிகை காலம் தொடங்கும் முன்னே ஆடை வடிவமைப்பாளர்கள் புதிய புதிய டிசைனில் சுடிதார்களை அறிமுகபடுத்த பெரிய பிரயத்தனமே மேற்கொள்வர். காரணம் பெண்களின் மனநிலைக்கு ஏற்ப பிடித்த சுடிதார் மாடல்களாக அறிமுக படுத்துவது தானே முக்கியம். இன்றைய நாளில் கணினி உதவுடன் ஆடை வடிவமைப்பு என்பது சுலபமாக இருந்தாலும் அந்தந்த சீசனுக்கு ஏற்றபடியாய் இருப்பதும் அவசியம்.

பெண்கள் விழாகாலத்திற்கு தகதகக்கும் பட்டு சேலையை அணிய விரும்புவர். அதே நவநாகரீக ஆடை என்றால் அதுபோல் தங்க நிற சரிகையில் பளபளக்கும் சுடிதார் தானே முதல்சாய்ஸ். நவீன ஆடைவடிவமைப்பில் கைதேர்ந்த நிறுவனங்கள் கோல்ட் பிரிண்டட் சுடிதார்களை பல விதமாய் அறிமுகப்படுத்தியுள்ளன. தங்க நிஹ சரிகை என்றதும் சுடிதாருக்கு பொருத்தமாய் இருக்குமோ என்ற பயமே இல்லாதவாறு ஒவ்வொரு சுடிதாரும் அற்புதம். அடர்த்தியான மெரூன், காவி, ஆரஞ்ச், நீலம், பச்சை போன்றவைகளின் மேற்புறத்தில் கோடுகளாகவும், பார்டர்களைகவும் தங்கநிறம் இழையோட விடப்பட்டுள்ளது.

சுடிதார் குர்தா பகுதிகளின் கைக்கு பார்டர், கீழ்புற பார்டர் போன்றவைகளில் மென்மையான தங்கநிறம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மார்பு பகுதி மற்றும் ஓரப்பகுதிகளில் கோடுகளாய் தங்க நிறம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனை அணிந்து செல்லும் பெண்கள் நவநாகரிக தோற்றத்துடன் காணப்படுவதுடன், பெண்மையின் இலக்கணமாகவும் தோற்றமளிக்கின்றனர்.

தங்க நிறத்திலான சரிகை நூல் மற்றும் உலோக நூற்கள் கொண்டு சுடிதார் பகுதியின் மேற்புறம் எம்பிராய்டரி செய்யப்பட்ட சுடிதார்கள் வருகின்றன. இவை கோல்டு பிரிண்ட் செய்யப்பட்ட சுடிதார்களை விட விலை அதிகமானது. இந்த சுடிதார் துணி ரகங்கள் என்பது ஜார்ஜெட் மற்றும் குட்டை வடிவில் செய்யப்படுகிறது.

அதுபோல் குர்தாவின் கீழ் பார்டர் பகுதியில் அகலமான பூந்தோட்டம் வடிவிலான எம்பிராய்டரி செய்யப்படுகிறது. இந்த சுடிதார்களுக்கு ஏற்றவாறு கனமான கைப்பட்டைகள் வெல்வெட் துணியில் தைக்கப்படுகிறது. இந்த சுடிதார்கள் தற்போது லாங் குர்தா மற்றும் மிடில் குர்தா போன்ற சைஸில் உலா வருகின்றன.

இந்த தங்க நிற பிரிண்ட் மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட சுடிதார்கள் அணியும் போது ஓர் பிரமிப்பான தோற்றம் ஏற்படுகிறது. பண்டிகை காலங்களில் மட்டுமல்லாது பல்வேறு விழாக்கள், மாலை நேர விருந்துகள் போன்றவற்றிற்கு அணிய ஏற்றவாறு உள்ளது. 201610150928405762 ladies like Gold shines embroidery Churidars SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button