ஆரோக்கிய உணவு

உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை லஸ்ஸி

உடல் சூடு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கற்றாழை லஸ்ஸியை வாரம் இருமுறை குடிக்கலாம்.

உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை லஸ்ஸி
தேவையான பொருட்கள் :

சோற்றுக் கற்றாழை – 100 கிராம்
தயிர் – 1 கப்
எலுமிச்சம் பழ ஜுஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
தேன் – தேவையான அளவு
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
புதினா இலை – 5

செய்முறை :

* சோற்றுக்கற்றாழையின் பச்சையான தோலை சீவி எடுத்தால் உள்ளே நுங்கு போல் இருக்கும். அதனை 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.

* மிக்சியில் சோற்றுக்கற்றாழை, தயிர், உப்பு, தேன், எலுமிச்சம் ஜுஸ், ஐஸ் க்யூப்ஸ், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே புதினா இலைகளைத் தூவி பருகவும்.

* உடல் சூட்டை குறைக்கும் இந்த கற்றாழை லஸ்ஸி. 201610150855039677 how to make aloe vera lassi SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button