ஆரோக்கியம் குறிப்புகள்

நிம்மதியான உறக்கம் அளிக்கும் உணவு எது?

இரவில் நாம் எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதற்கும், நிம்மதியான உறக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது.

நிம்மதியான உறக்கம் அளிக்கும் உணவு எது?
இரவில் நாம் எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதற்கும், நிம்மதியான உறக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. இரவு நேரத்தில் வயிறு மந்தமாக இருக்கும்வகையில் அதிகமாகச் சாப்பிட்டாலும், நேரம்கெட்ட நேரத்தில் பசி எடுக்கும்வகையில் குறைவாகச் சாப்பிட்டாலும் சங்கடம்தான்.

எனவே, இரவில் எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிடலாம் என்று பார்ப்போம்…

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருட்களான, கார்ன் மற்றும் ஓட்ஸை ஒரு கப் எடுத்து பாலில் கலந்து, சர்க்கரை சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிடலாம். இதனால் இரவில் அகால நேரத்தில் பசி ஏற்படாமல், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

இரவில் பசி ஏற்பட்டால் ஒரு கப் தயிர் சாப்பிடலாம். தயிரில் டிரிப்டோபேன் உள்ளது. எனவே இது வயிற்றில் ஏற்படும் பசியை போக்கி, வயிறு நிறைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

உடம்புக்கு ஆரோக்கியத்தைத் தரும் பழங்களான ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களை ஒன்றாக கலந்து பழக்கலவை (சாலட்) தயாரித்து ஒரு கப் அளவு சாப்பிடலாம். இதனால் நல்ல உறக்கம் ஏற்படும். மேலும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.

கேரட் மற்றும் வெள்ளரிக்காயை நறுக்கி, இரண்டையும் பழக்கலவை ஆக்கி, சாப்பிடலாம். இது எளிதில் செரிமானம் ஆகும். வயிறும் நிறைந்து இருக்கும்.

மீன்களில் கொழுப்புகள் இல்லை. அதேநேரம், அதிக அளவு புரதம் மற்றும் தாதுச் சத்துகள் உள்ளன. எனவே மீன் வகைகளை இரவு நேரத்தில் பசி ஏற்பட்டபின் சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும், நல்ல உறக்கத்தைத் தரும். 201610150835339395 Food is provided and relaxed sleep SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button