சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கான ரைஸ் நூடுல்ஸ் பான்கேக்

குழந்தைகளுக்கு பான்கேக் மிகவும் பிடிக்கும். ரைஸ் நூடுல்ஸ் வைத்து பான்கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கான ரைஸ் நூடுல்ஸ் பான்கேக்
தேவையான பொருட்கள் :

ரைஸ் நூடுல்ஸ் – 1 கப்
வாழைப்பழம் – 2 பெரியது
முட்டை – 2
பால் – கால் கப்
பேரீச்சம் பழம் – கால் கப்
நட்ஸ் – கால் கப்
சர்க்கரை – சுவைக்கு
ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
வெண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

* பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.

* நட்ஸ், பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாழைப்பழத்தை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் ரைஸ் நூடுல்ஸ்( உடைத்து போடவும்)போட்டு அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். நூடுல்ஸ் நன்கு மென்மையாகும் வரை வைக்கவும்.

* மற்றொரு பாத்திரத்தில் முட்டை, பால், சர்க்கரை, ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.

* அடுத்து அதில் நூடுல்ஸ், பொடியாக நறுக்கிய நட்ஸ், பேரீச்சம்பழம், வாழைப்பழம் போட்டு நன்றாக கலக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நூடுல்ஸ் கலவையை ஒரு கரண்டி கனமான அளவில் விட்டு சுற்றி வெண்ணெய் விடவும். வெந்ததும் திருப்பி போட்டு மறுபடியும் சுற்றி வெண்ணெய் விடவும். தோசை கரண்டியால் நன்றாக அழுத்தி விடவும்.

* வெந்ததும் எடுத்து ஏலக்காய் நசுக்கி போட்ட தேங்காய் பாலுடன் பரிமாறவும்.201610141421586985 Rice Noodle Pancake SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button