ஆரோக்கிய உணவு

பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள்

பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புகள் என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள்
சாலையோர தள்ளு வண்டிக் கடைகளில் பானி பூரி விற்கப்படுகிறது. சில கடைகள் சாக்கடைக்கு அருகிலேயே இருக்கின்றன. சுற்றுச்சூழலே சுகாதாரமற்று இருக்கிறது.

பூரியை பெருவிரலால் உடைத்து அதனுள் மசாலாவைத் திணித்து புதினா நீரில் முக்கி எடுக்கின்றனர். கை பெருவிரல் நகத்தில் படிந்திருக்கும் அழுக்கு பானிபூரியிலும் ஒட்டிக் கொள்ளும்.

இப்படியாக சுகாதாரக் குறைபாடுள்ள பானி பூரியை சாப்பிடும் நமக்கு என்ன ஆகும்?

கையால் உடைத்து, தண்ணீரில் முக்கிக் கொடுக்கிறவரது கை எந்தளவு சுத்தமாக இருக்கிறது என்பதைப்பார்க்கவேண்டும். Hookworms, Pinworms போன்ற புழுக்கள் கைகளில் இருந்து தான் பரவுகின்றன. அதைச் சாப்பிடும் போது வயிற்றில் இப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்புகளதிகம்.

கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வாந்தி, வயிற்று ப்போக்கு ஆகியவை ஏற்படலாம். வைரஸ் மூலம் பரவும் ஹெபடைடிஸ் ஏ’ ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.

பூரி தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணெய் எப்படிப்பட்டது என்பதும் அவசியம். எண்ணெயை ஒரு முறை தான் கொதிக்க வைத்து பயன்படுத்தவேண்டும். நடைமுறையிலோ எண்ணெயை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தும்போது அந்த கெட்ட எண்ணெய் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

புதினா ரசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் அது பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற, சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லாத இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

நொறுவை உணவுகளிலேயே அதிகம் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பது பானி பூரியில்தான். சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பானி பூரிகளை சாப்பிடாமல், சுகாதாரமான முறையில் தயாரிப்பதை சாப்பிடலாம். குறிப்பாக இவற்றை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டும்.

பானிபூரி சாப்பிடுவதால் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனும்போது ருசிக்காக ஏன் நோயை விலை கொடுத்து வாங்கவேண்டும்? 201610141255006723 pani puri at road side shop SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button