மருத்துவ குறிப்பு

கழுத்து வலியால் அவஸ்தையா? அப்ப இந்த பயிற்சி செய்யுங்க

கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பலனை அடையலாம்.

கழுத்து வலியால் அவஸ்தையா? அப்ப இந்த பயிற்சி செய்யுங்க
இன்றைய காலகட்டத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் பெரும்பலான நபர்கள் கழுத்து வலியால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு மிக எளிமையான சூப்பரான பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நிமிர்ந்த நிலையில் சேரில் உட்கார்ந்து கொண்டு, பாதங்களை தரையில் பதித்து, உள்ளங்கைகளைத் தொடைகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக ஆழமாக 10 முறை மூச்சை இழுத்து வெளியே விட வேண்டும்.

தொடர்ந்து இதே நிலையில் மெதுவாக மூச்சுவிட்ட படியே இடதுபுறமாக கழுத்தைத் திருப்பி, மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளியேவிட வேண்டும்.

கழுத்தைத் திருப்பும்போது, இரண்டு விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதேபோல், வலதுபுறம், மேல், கீழ் எனக் கழுத்தைத் திருப்பி பயிற்சி செய்ய வேண்டும், கழுத்தை மட்டும் திருப்ப வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நமது மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராக செல்வதுடன் செல்களும் புத்துயிர் பெறுகின்றன.201610171023545477 simple exercises neck pain SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button