1449228433 9262
சிற்றுண்டி வகைகள்

சுவைக்க சுவைக்க சுவையான முள்ளங்கி சப்பாத்தி

உடல் பருமனாக உள்ளவர்கள் அன்றாடம் முள்ளங்கி உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்கள் உடல் பருமன் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் முள்ளங்கி கெட்ட கொழுப்பை கரைத்து வெளியே தள்ளும் சக்தி வாய்ந்தது.

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – 2
கோதுமை மாவு – 1 கப்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 8 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:
முள்ளங்கியை நன்கு கழுவி துருவலாக துருவிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்தவுடந்துருவிய முள்ளங்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கொள்ளவும்.

கோதுமை மாவுடன் வதக்கிய முள்ளங்கி மசாலாக்கள், உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்­ணீர் சேர்த்து கொள்ளவும் முள்ளங்கித் துருவியதிலேயே தண்­ணீர் இருக்குமாதலால் தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும். நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் திரட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பிவிட்டு எடுத்து பரிமாறவும்.

சுவைமிகுந்த முள்ளங்கி சப்பாத்தி ரெடி.1449228433 9262

Related posts

சாமை சிறுபருப்பு  முள்ளு முறுக்கு

nathan

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி

nathan

மஷ்ரூம் கட்லட்

nathan

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

சுவையான சுண்டல் கிரேவி

nathan

முழு தம் காலிஃப்ளவர்

nathan

ராஜ்மா அடை

nathan

சத்துக்கள் மிகுந்த வெஜிடபிள் போண்டா செய்ய வேண்டுமா?….

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி

nathan