மருத்துவ குறிப்பு

பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒன்றுசேரும் போது ஏற்படும் மாற்றங்கள்

காதலில் பிரிவுகள் சகஜம் தான், ஆனால், அந்த பிரிவிற்கு பின் உங்கள் காதலில் ஏற்படும் மாற்றங்கள் வேறு விதமாக இருக்கும். காதல் பிரிவிற்கு பின் இணையும் காதல் ஜோடிகளில் புரிதல் அதிகம் இருக்கும். மீண்டும் ஒரு புரிதலற்ற காரணத்தினால் பிரிந்துவிட கூடாது என மிகவும் கவனமாக இருப்பார்கள்.

ஆண்களை விட பெண்கள் மிகவும் அன்யோன்யம் ஆகிவிடுவார்கள். காதலில் ஒரு முதிர்ச்சி ஏற்படும். எதையும் யோசித்து முடிவெடுக்கும் பழக்கம் அதிகரிக்கும். இந்த முதிர்ச்சி பல சண்டைகள் ஏற்படாது தடுக்கும். புரிதல் மற்றும் முதிர்ச்சியின் பிள்ளையாய் உங்கள் காதலில் அக்கறை அதிகரிக்கும். மீண்டும் ஒரு பிரிவை ஏற்க மனம் தயாராக இருக்காது. முன் ஏற்பட்ட காயத்தை இந்த அக்கறை எனும் மருந்து மிக வேகமாக ஆற்றும். மிஞ்சுதலை விட, கொஞ்சுதல் அதிகரிக்கும்.

முதிர்ச்சியின் காரணமாய் எல்லை மீறல்கள் இல்லாத மெய் காதல் வெளிப்படும். இது உங்கள் காதலின் அஸ்திவாரத்தை வலுவாக்கும். ஆனால் சில சமயங்களில் பிரிந்தவர்கள் ஒன்று சேரும் போது முன்னால் நடந்த சில விஷங்கள் மனதை அரித்துக்கொண்டிருக்கும். அதன் தாக்கத்தை சில சமயங்களில் வார்த்தைகளில் எதிர்ப்பார்க்கலாம்.

சில சமயங்களில் சின்ன சின்ன விஷயங்களில், “அன்று நீ அப்படி செய்துவிட்டு போனவன் தானே” என்று சொல்லிக் காட்டும் குணம் எட்டிப்பார்க்கும். எந்த காரணத்தினால் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தீர்களோ அது அவ்வப்போது மனதை அரிக்கும். இப்போதும் அவன் அவ்வாறு தான் இருக்கிறானா? அவன் மாறியிருக்க மாட்டானோ? என சந்தேகம் மனதினுள் அடிக்கடி எட்டிப்பார்க்கும். சொல்லிக் காட்டுதல், சந்தேகம் இந்த இரண்டு தீமைகளை வென்றுவிட்டீர்கள் என்றால் உங்கள் காதல், மனதில் இருந்து திருமணத்திற்கு செல்ல எந்த தடையும் இருக்காது12

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button