எடை குறைய

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் ஆளி விதை

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் ஆளிவிதையை தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் ஆளி விதை
ஆளி விதை இதய நோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து என்றும் சொல்கிறார்கள்.

ஆளி விதையில் ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானவை மூன்று குணங்கள்:

ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள்: இவை இதயத்திற்கு உகந்த நண்பனாக இருக்கும் அமிலங்கள் ஆகும். ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது.

லிக்னான்ஸ் (Lignans): ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜன் எதிர்ப்பு குணங்கள் பிரசித்தி பெற்றவையாகும். பிற தாவர உணவுகளை விட 75 முதல் 800 மடங்குகள் அதிக அளவிலான லிக்னான்ஸ்கள் ஆளி விதையில் உள்ளன.

நார்ச்சத்து: ஆளி விதையில் கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

எரிச்சலை தவிர்த்தல் மற்றும் இதயத் துடிப்பை சமனப்படுத்துதல் போன்றவற்றை செய்யும் திறன் மிக்க மருந்தாக ஒமேகா-3 உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒமேகா-3 நிரம்பியுள்ள ஆளி விதைகள் தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்க்கின்றன. வெள்ளை அணுக்களை இரத்த நாளங்களின் உள் வளையங்களுடன் இணைத்து வைப்பதன் மூலம் தமனிகளில் கழிவுகள் சேருவதையும் ஒமேகா-3 தவிர்க்கிறது. இந்த ஒமேகா-3 ஆளி விதைகளில் பெருமளவு குவிந்துள்ளது.

ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மேம்படுகிறது என்று முன்னோடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஹீமோகுளோபின் A1c ஆய்வுகளின் போது, இரத்தத்தில் 2 வகையான நீரிழிவு நோய்கள் கணடறியப்படுகின்றன)

டயட்டில் இருப்பவர்கள், உடல் கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் ஆளி விதையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பயன் அடையலாம்.

இந்த விதை, கடுகு போன்று சுவைதரும். இதில் மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. இதன் தளிர் இலையை சாலட்டில் சேர்த்து சாப்பிடும் பழக்கமும் உள்ளது.

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் தினமும் 5 கிராம் ஆளிவிதையை நீரில் ஊற வைத்து, மென்று சுடுநீர் அருந்திவந்தால், மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். ஆளிவிதையை அரைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். ஒரு மாதம் தினமும் ஒரு வேளை மேற்கண்டவாறு சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்களின் சுரப்பு சரியாகும். அதன் மூலம் மாதவிடாய் கோளாறு உள்பட பல்வேறு உடல் பிரச்சினைகள் பெண்களுக்கு நீங்கும்.

ஆளி விதைக்கு தாய்ப் பாலை பெருக்கும் சக்தியும் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி விதையை பொடி செய்து பாலில் கலந்து பருகிவரலாம்.

ஒரு தேக்கரண்டி ஆளிவிதை பொடியில், ஒரு தேக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பலப்படும். ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

ஓமம், வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவைகளோடு ஆளிவிதை பொடியை கலந்து சூரணம் தயாரிக்கலாம். இதனை தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை சீர் செய்திட முடியும்.201610191026540701 Flaxseed may reduce cholesterol in the body SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button