ஆரோக்கியம் குறிப்புகள்

ஏழே நாளில் இதுவரை உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்க செய்ய வேண்டியவைகள்!

நச்சுத்தன்மை முறிவு என்பது சுத்தமான சருமத்தையும், பளபளப்பான கண்களை கொண்டிருப்பது மட்டுமல்ல; கூடுதல் எடையை குறைப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் ஆற்றல் திறன் அளவுகளை ஊக்குவிப்பது போன்றவைகளும் அடங்கும்.

உங்கள் உடலுக்கு சற்று இடைவேளை கொடுத்து, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை படித்து, அவற்றை ஏழு நாட்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், இதுவரை உங்கள் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றி, உடலை புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் சிகரெட், மதுபானம், பால் பொருட்கள் (தினசரி வெறும் அரை கப் தயிர் மட்டும் சாப்பிடலாம்), காபி, சர்க்கரை, தேன், செயற்கை இனிப்பூட்டிகள், பார்லி, ஓட்ஸ், கம்பு, கோதுமை, அரிசி போன்ற தானியங்கள், உலர்ந்த பழங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

உண்ணக்கூடிய உணவுகள் தோல் நீக்கப்பட்ட கோழிக்கறி, முட்டைகள், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நட்ஸ் (உப்பு சேர்க்கப்படாத பதனிடப்படாத பாதாம்), விதைகள், வெள்ளை டீ, கிரீன் டீ, ப்ளாக் டீ, நற்பதமான காய்கறிகள் மற்றும் பழங்கள், மீன், தண்ணீர் போன்றவற்றை சாப்பிடலாம்.

காலையில் எலுமிச்சை சாறு குடித்தல் இது உங்கள் உடலை சுத்தப்படுத்தி, செரிமான அமைப்பை மேம்படுத்தும். அரை எலுமிச்சை பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாறை வெந்நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி தினமும் 30-45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நடைப்பயிற்சி, யோகா, ஓடுதல் அல்லது ஜிம்மிற்கு செல்லுதல் என எந்த வகையிலான உடற்பயிற்சியிலும் ஈடுபடலாம். உங்களுக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுத்து அவற்றை தொடர்ந்து செய்து வரவும்.

பச்சை உணவுகளை உண்ணுதல் பச்சை உணவுகளை உண்ணுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்கள் நேரத்தையும் கூட மிச்சப்படுத்தும். மேலும் அவற்றில் என்ஸைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளமையாக இருக்கும். உதாரணமாக, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் போன்றவற்றை பச்சையாக அப்படியே சாப்பிடலாம்.

மன ரீதியான ஆரோக்கியம் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் போது, மனதில் உள்ள நச்சையும் சற்று நீக்க வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் மனதின் படபடப்பை குறைக்கலாம். உங்களுக்கு தியானம் செய்து பழக்கம் இல்லையென்றால் ஆழமாக சுவாசித்து பயிற்சி பெறுங்கள்.

அதிகமாக குடியுங்கள் அதிகமாக குடியுங்கள் என்றதும் மதுபானத்தை சொன்னோம் என்று நினைக்க வேண்டாம். தினமும் குறைந்தது 3 லிட்டர் திரவ பானங்களை குடிக்க வேண்டும். இது சிறுநீரகத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவதோடு, நிணநீரையும் நகர்த்த உதவும். மேலும் நச்சுத்தன்மையை நீக்கும் மூலிகை டீ, நற்பதமான காய்கறி ஜூஸ் மற்றும் சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும்.

நன்றாக மெல்லவும் உணவை விழுங்குவதற்கு முன்பு நன்றாக மெல்லவும். உணவை நன்றாக மெல்லுவதால் செரிமானம் மேம்படும். அதனால் அதிக வெப்பம் தடுக்கப்படும்.

24 1437717488 4 fitness couple

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button