முகப் பராமரிப்பு

குளிர்கால வறட்சி இல்லாத மென்மையான சருமம் கிடைக்க ஒரு ஈஸி டிப்ஸ் :

குளிர்காலம் வந்தாலே சருமத்தில் எரிச்சல் வறட்சி ஏற்பட்டு சுருக்களுக்கு வழி தரும். போதாதற்கு சருமத்தில் எளிதில் அலர்ஜி உண்டாகும்.

இந்த குளிர்காலத்தில் ஈரத்தன்மை சருமத்தில் குறையும். காரணம் குளிரினால் நாம் சரியாக நீர் அருந்த மாட்டோம். இதனால் சருமத்தில் நீர் பற்றாக்குறையினால், வறண்டு போய் எரிச்சல், தேமல், போன்ற சரும பாதிப்புகளை தரும்.

ஆகவே இந்த மாதிரியான நேரங்களில் நிறைய நீர் அருந்த வேண்டும். நிறைய காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்ளுதல் முக்கியம். இவை ஈரப்பததை சருமத்தில் தக்க வைக்கும். அதோடு, முகத்தில் வறட்சியை போக்க, மாய்ஸ்ரைசர் பயன்படுத்தலாம்.

இயற்கையானவற்றை உபயோகித்தல் நல்லது. கெமிக்கல் கலந்த காஸ்மெடிக் க்ரீம்கள் மேலும் சரும பாதிப்புகளை தரும்.

இங்கு இயற்கையாக எளிய முறையில் எப்படி ஈரப்பதத்தை தக்க வைக்கலாம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து படியுங்கள்.

தேவையானவை : தேங்காய் எண்ணெய்- 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் – 1 டீ ஸ்பூன் தயிர் – 1 டீ ஸ்பூன்.

இவை மூன்றுமே சருமத்தில் குழந்தையின் சருமத்தைப் போல மென்மையாக்கும். ஈரப்பதத்தை சருமத்திற்கு அளித்து சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.

இந்த மூன்றையும் நன்றாக குழைத்து, முகத்தில் தெயுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 நாட்கள் இப்படி செய்வதனால் சுருக்கங்கள் போய் விடும். சருமம் பொலிவாக இந்த குளிர்காலத்திலும் இருக்கும்.

30 27 1467025403

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button