இளமையாக இருக்க

இளமை நிலைத்து இருக்க இஞ்சி

இளமை நிலைத்திருக்க, இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டுவர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வர, நரை, திரை, மூப்பு அணுகாது. தேகம் அழகுபெறும். மனம் பலப்படும்.

இளமை நிலைத்து இருக்க இஞ்சி
அஜீரணம், பசியின்மை, வயிறு பொருமல், வயிற்று வலி, சளி, தலைவலி, மயக்கம், இருமல் இப்படி பல வகைகளில் நமக்கு பயன் அளிக்கும் சமையல் நண்பன் இஞ்சி ஆகும். பச்சை கிழங்கு இஞ்சியாகவும், பதப்படுத்தி காய வைத்து சுக்காகவும் நமக்கு பயன் அளிக்கிறது.

இஞ்சி :- மணமுள்ள கிழங்குகளை உடைய சிறு செடி தமிழகமெங்கும் பரவலாகப் பயிர் செய்யப்படுகின்றது. கிழங்குகளே பொதுவாக இஞ்சி எனப்படுபவை. இவை, மருத்துவப் பண்பும், உணவு உபயோகமும் உள்ளவை. வாசனைக்காகவும், காரத்திற்காகவும் இது உணவில் சேர்க்கப்படுகின்றது. இது பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். மணற்பாங்கான நிலங்களில் இஞ்சி ஏராளமாக பயிராகின்றது.

தமிழகம், பஞ்சாப் மாநிலங்களிலும், வங்காள தேசத்திலும் அதிகமாக விளைகின்றது. நன்றாகக் காய வைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின் கிழங்குகளே சுக்கு எனப்படுபவை. இஞ்சியின் எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கும் உண்டு. சுக்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மருத்துவப்பயன்கள்:-

இஞ்சிக் கிழங்குகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை, வியர்வை மற்றும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் பசித்தூண்டியாகவும் வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயல்படும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.

முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி நீக்கவும். பின்னர், சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர் தினமும் இரண்டு துண்டுகள் வீதம், உணவிற்கு முன்னர் மென்று சாப்பிட வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்திற்கு இஞ்சிச் சாற்றை தொப்புளைச் சுற்றிப் பற்றுப்போட வேண்டும்.

வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாக இஞ்சிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்குத் தினமும் மூன்று வேளைகள் குடிக்க வேண்டும்.

சளியுடன் கூடிய இருமல் கட்டுப்பட, இஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக் கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகவும்.

இளமை நிலைத்திருக்க, இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டுவர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வர, நரை, திரை, மூப்பு அணுகாது. தேகம் அழகுபெறும். மனம் பலப்படும்.201610241617110611 Stay young ginger SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button