முகப் பராமரிப்பு

சருமத்தை மின்னச் செய்யும் பூசணிக்காய் ஃபேஸ் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூசணிக்காயில் நிறைய நீர்சத்துக்கள் உள்ளது. கால்சியம் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. இதனை உணவில் சப்பிட்டு வந்தால் உடல் இளைத்தவரகள் பூசியது போலிருப்பார்கள் என கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதிலுள்ள நீர்சத்தும், கொழுப்புகளை குறைக்கும். இது உணவில் மட்டுமல்ல அழகிலும் அற்புதங்களை செய்யும் என தெரிந்து கொள்ளுங்கள்.

இது சருமத்திற்கும் மிக நல்லது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு ஏற்றது. பூசணிக்காயை கொண்டு எவ்வாறு சருமத்தில் அழகூட்டலாம் என பார்க்கலாம். ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற வகையில் பூசணிக்காயை உபயோகப்படுத்தலாம்.

எல்லா விதமான சருமத்திற்கு : உங்களுக்கு வறண்ட அல்லது எண்ணெய் சருமம் அல்லது சென்ஸிடிவ் சருமமாக இருந்தாலும், இந்த ஃபேஸியல் பேக் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

தேவையானவை : பூசணியின் சதைப்பகுதி – அரைக் கப் தேன் – அரை ஸ்பூன் பால் – கால் டீஸ்பூன் பட்டைப் பொடி – சிறிதளவு

பூசணியின் சதைப்பகுதியை மசித்து, அதனுடம் மற்ற பொருட்களை சேர்த்து, முகத்தில் தேயுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், சருமம் பளபளப்பாக இருக்கும். சுருக்கங்கள் போய்விடும். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை உகந்தது.

வறண்ட சருமத்திற்கு : பூசணியின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் சர்க்கரை, கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவிவிடவும். இது சருமத்தில் ஈரப்பதம் அளித்து,மென்மையாக்கும்.

எண்ணெய் சருமத்திற்கு : பூசணியின் சதைப்பகுதியுடன், சிறிது எலுமிச்சை சாறு, ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து, முகத்தில் தேய்கவும். இவை சருமத்தில் அமில காரத் தன்மையை சமன் செய்யும்.

முகப்பருவை நீக்க :

பூசணி முகப்பருக்களை விரட்டும் தன்மை கொண்டது. பூசணி சதைப்பகுதியுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, கலக்கவும். இவற்றை முகத்தில் போட்டு காய்ந்தவுடன் கழுவுங்கள். வாரம் 3 முரை செய்தால், முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

8 27 1467011356

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button