மருத்துவ குறிப்பு

முக நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்

முக நரம்பு பாதிப்பு அல்லது பெல்ஸ் பால்ஸி எனப்படும் பாதிப்பு முகத்தின் ஒரு பக்க சதைகள் வலு விழப்பது ஆகும். ஒரு பக்க தசைகளை கட்டுப்படுத்தும் முக நரம்பு பாதிக்கப்படுவதால் இந்த பக்க முகம் தொய்வாக இறங்கி விடுகின்றது.

இது உங்களது நாக்கின் சுவை உணர்வினையும் செயலிழக்கச் செய்யலாம். இத்தகு பாதிப்பு திடீரென ஏற்பட்டு தானாகவே சில வாரங்களில் சரியாகி விடும். இந்தப் பாதிப்பின் காரணத்தினை அதிக தெளிவோடு மருத்துவ உலகில் சொல்ல முடியாவிட்டாலும் ‘ஹெர்பெஸ் வைரஸ்’ கிருமியின் பாதிப்பு காரணமே அநேக பாதிப்புகளுக்கு காரணமாகின்றது. அநேக நபர்களுக்கு பாதிக்கப்பட்ட நரம்பு வீங்கி விடுகின்றது.

முக நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்:

* திடீரென முக கோணல், தொய்வு
* பாதிக்கப்பட்ட பக்க கண் மூட முடியாமை
* கண்ணில் அதிக நீர் வடிதல் மற்றும் கண் வறண்டு விடுதல்
* சுவையின்மை
* காது, காதுக்குப் பின்னால் வலி
* பாதிக்கப்பட்ட பக்கம் மரத்தது போல் இருத்தல்
* சத்தம் தாளாமை முக நரம்பு பாதிப்பு ஒரு பக்க முழுமையாகவோ அல்லது பாதி அளவோ இருக்கலாம்.

சிலருக்கு இருபக்க முக நரம்புப் பாதிப்பு ஏற்படலாம். இரு பக்க முகத்திலும் முக நரம்புகள் இருக்கின்றன. அவை மூளையிலிருந்து ஆரம்பித்து காதுக்கு முன்பாக முகத்தில் நுழைந்து ஐந்து பிரிவுகளாக பிரிகின்றது. முக பாவங்களுக்கு இந்த நரம்பே காரணமாகின்றது. கண்ணீர், எச்சில் சுரக்க, சுவை உணர்வு இவையும் இந்த நரம்பினாலேயே செயல்படுகின்றது.

நரம்பு பாதிப்பு ஏற்படுவதின் காரணங்கள்.

* வைரஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்பு
* அறுவை சிகிச்சை: முகத்தில் ஏற்படும் அறுவை சிகிச்சையால் முக நரம்பில் பாதிப்பு ஏற்படலாம்.
* கிருமி பாதிப்பு, காதில் ஏற்படும் கிருமி பாதிப்பு
* நரம்பு கோளாறு பாதிப்பு
* விபத்தில் நரம்பு பாதிப்பு
* குழந்தை பிறக்கும்பொழுது ஆயுதம் பயன்படுத்துவதில் முகத்தில் பாதிப்பு ஏற்பட்டால்
* பிறப்பிலேயே நரம்பு பிரச்சினை
* பக்கவாதம் முக நரம்பில் சிறிய காயம் ஏற்பட்டால் அதனை முதல் பிரிவு பாதிப்பு என்பர்.

பொதுவில், இந்த பாதிப்பு எட்டு வாரங்களில் சரியாகி விடும். முக நரம்பில் ஏற்படும் சற்று கூடுதல் காயம். இதனை இரண்டாம் பிரிவு என்பர். இதற்கு பாதிப்பும் நரம்பு பூரண குணம் அடைய நான்கு மாதம் கூட ஆகலாம். ஏனெனில், நரம்பு நாள் ஒன்றுக்கு ஒரு மி.மீ., அளவு முன்னேற்றம் அடைகின்றது. முக நரம்பில் ஏற்படும் அதிக காயம் மூன்றாவது பிரிவு படும். இதில் முன்னேற்றம் மிக மிக தாமதமாக இருக்கலாம். முழுமையான முன்னேற்றம் முடியாமல் போகலாம். சில நேரங்களில் அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம்.

முக சதைகளின் வேலைகள்:

* புருவத்தினை உயர்த்த உதவும்
* கண்களை மூட முடியும்
* நெற்றியினை சுருக்க முடியும்
* புன்முறுவல், சிரிப்பு
* உதடுகளை அசைக்க முடியும்
* தாடை அசைவு
* மூக்கை சுருக்க, உறிஞ்ச முடியும்

நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்:

பொதுவில் ஒருபக்க பாதிப்பாக இருக்கும். அரிதாகவே இரு பக்க பாதிப்பு இருக்கும். முக பாதிப்பு, கை, தோள்பட்டை, கால்களை பாதிக்காது. இவற்றிலும் பலவீனம் தெரிந்தால் உடனடி மருத்துவ உதவி தேவை. ஏனெனில், இது பக்கவாதமாக இருக்கலாம். ஒரு பக்க முக நரம்பு பாதிப்பில் புருவம், கண், கன்னம், வாய் பாதிப்பு இருக்கும்.

பாதிக்கப்பட்ட பகுதி தட்டையானது போல் இருக்கும். அசைவுகள் இருக்காது. தொடு உணர்வு பாதிக்கப்பட்ட பகுதியில் இல்லாமல் இருக்கலாம். கண் சிமிட்டவோ, கண் மூடவோ முடியாமல் இருக்கலாம். இதற்கு மருத்துவ உதவி அவசியம்.KULIR

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button