மருத்துவ குறிப்பு

யாருக்கெல்லாம் சிறுநீர்க் குழாய் தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது

யாருக்கெல்லாம் சிறுநீர்க் குழாய் தொற்று நோய் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.

யாருக்கெல்லாம் சிறுநீர்க் குழாய் தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது
சிறு நீரகக் குழாயில் தொற்று ஏற்படுவது சாதரணமாக விட முடியாது. அது ஆரோக்கியமற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகும்.
நமது உடலின் உள்ளே இருக்கும் கிருமிகள் வெளியேறுவது சிறுநீரக குழாயின் மூலமாகத்தான். அதே போல் எளிதில் நுழையும் இடமும் சிறுநீரக குழாயின் மூலமகத்தான்.

போதிய நீர் குடிக்காமலிருந்தால் சிறு நீர் தங்ககிவிடக் கூடும். இதனால் கிருமிகள் எளிதில் உருவாகி தொற்றை உண்டாக்கிவிடும்.
அதேபோல் மலச்சிக்கல் அல்லது வயிற்று போக்கு இவ்விரண்டுமே சிறு நீரகத் தொற்றை உருவாக்கிவிடும். யாருக்கெல்லாம் இத்தொற்று அதிகம் தாக்கும் என்பதை பார்க்கலாம்.

பொதுவாக ஆண்களுக்கு 50 வயதை அடைந்த பின் புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகிவிடும். இதனால் சிறு நீரை வடிக்க முடியாமல் சிறு நீரகத்திற்கு பாதிப்பு உண்டாகும். எனவே அவர்களுக்கு சிறு நீர் வெளியே செல்ல முடியாதபடி தங்கும்போது தொற்று உண்டாகக் கூடும்.

மெனோபாஸ் பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதால் அந்த சமயத்தில் அவர்களுக்கு எளிதில் சிறு நீரகக் குழாய் தொற்று உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.

டைப் 1 சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு சிறு நீரகக் குழாய் தொற்று உண்டாகும் வாய்ப்பு அதிகம். குளுகோஸ் அளவு அதிகமாக சிறுநீரில் சேரும்போது கிருமிகள் அதிகமாக பெருக வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு தொற்று அதிகம் உண்டாகும்.

ஏதாவது அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு சிறு நீரகம் வெளியே செல்ல சிறு குழாய் ஒன்றை உள்ளே செலுத்தியிருப்பார்கள். இந்த குழாயால் கிருமிகள் உள்ளே செல்ல வாய்ப்புகள் உண்டு. இதனால் தொற்று உண்டாகும்.

வாகன ஓட்டுநர்கள், நர்ஸ் மற்றும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் மற்றும் பொது கழிவறைகளிலேயே நாள் முழுவதும் சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இவர்களுக்கு அதிகம் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது.201610281250200128 Urinary tract infection SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button