சாலட் வகைகள்

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்

காலையில் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இப்போது ஆப்பிள் – ஆரஞ்சு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்
தேவையான பொருட்கள் :

கேரட் – 3
ஆப்பிள் – 2
ஆரஞ்சு பழம் – 2
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு – 2 ஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா பருப்பு – 2 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
புதினா – சிறிதளவு
உப்பு, மிளகு தூள் – தேவையான அளவு

செய்முறை :

* ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கி விட்டு வட்டவடிவமாக வெட்டவும்.

* கேரட், ஆப்பிளை நீளவாக்கில் வெட்டவும்.

* இஞ்சி, புதினாவை பொடியாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், கேரட், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, இஞ்சி, உப்பு, ஆலிவ் ஆயில் போட்டு நன்றாக கலக்கவும்.

* ஒரு தட்டில் மீது வட்டமாக வெட்டிய ஆரஞ்சு துண்டுகளை அடுக்கி அதன் மேல் கலந்து வைத்து கலவையை அதன் நடுவே வைக்கவும்.

* அதன் மேல் நறுக்கிய பிஸ்தா பருப்பு, மிளகு தூள், புதினா இலைகளை தூவி பரிமாறவும்.

* மிகவும் சத்தானது இந்த சாலட்.

Related posts

காளான் தயிர் பச்சடி : செய்முறைகளுடன்…!

nathan

பஞ்சாபி தஹி பிந்தி/தயிர் வெண்டைக்காய்

nathan

சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்

nathan