scar 07 1467873862
சரும பராமரிப்பு

அழகைக் கெடுக்கும் தழும்புகள் மறைய வீட்டிலேயே இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!!

சருமத்தில் காயம் ஏறபட்டால், உடனே அங்கே கொலாஜன் உற்பத்தியாகி, மெல்லிழைகளைக் கொண்டு, சருமத்தை ரிப்பேர் செய்யும். அந்த சமயத்தில் தழும்பை விட்டுச் செல்லும்.

மிக ஆழமான காயம் என்றால், கொலாஜன் அதிகமாக உற்பத்திச் செய்து, கடினமான தழும்பை ஏற்படுத்திவிடும். இது மறைவது கடினம் . லேசான மற்றும் ஓரளவு பெரியதான காயம் என்றால் தழும்புகள் தானாக மறைந்துவிடும். அல்லது, மறையச் செய்துவிடலாம்.

இப்போது நிறைய லேசர் மற்றும், நவீன மருத்துவங்கள் தழும்புகளை போக்க வந்துவிட்டாலும், அவை பக்க விளைவுகளை உண்டாக்கக்கூடியவை.

எனவே முடிந்த அளவிற்கு வீட்டிலேயே தழும்புகளை குணப்படுத்த முற்படுங்கள். அவ்வாறான எளிய வழிகள் இங்கே குறிப்பிட்டுள்ளது. அவற்றை உபயோகித்துப் பாருங்கள். பயன்களைப் பெறுங்கள்.

சோற்றுக் கற்றாழை : சோற்றுக் கற்றாழை புதிதான சரும செல்களை உருவாக்கும். பாதிப்படைந்த இடங்களில் உண்டான இறந்த செல்களை நீக்கிவிடும்.

சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து, தழும்பின் மீது வட்ட வடிவமாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம். புதிதான தழும்பு என்றால், விரைவில் மறையச் செய்துவிடும்.

விட்டமின் ஈ எண்ணெய் : சருமத்தை பாதுகாப்பதில் விட்டமின் ஈ க்கு பெரும் பங்கு உண்டு. அதேபோல், தழும்பினை வேகமாக மறையச் செய்துவிடும் சக்திகொண்டது இது. விட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை எடுத்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன், தழும்பில் மஜாஜ் செய்யவும். வேகமாக தழும்பு மறைந்துவிடும்.

எலுமிச்சை : எலுமிச்சையில் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. இவை தழும்பின் மீது வேகமாக செயல் புரியும். தழும்பில் புதிய செல்களை உருவாக்கத் தூண்டும். அவ்வாறு புதிய செல்கள் உருவாகும்போது, தழும்பு எளிதில் காணாமல் போய்விடும். எலுமிச்சை சாறினை தழும்பில் தேய்த்து, 2 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்தால், மாற்றங்கள் காணலாம்.

கோகோ பட்டர் : கோகோ பட்டர் எல்லாவிதமான தழும்பின் மீதும் செயல் புரியும். சில பொருட்கள் தழும்புக்குள் ஊடுருவாது. ஆனால் கோகோ பட்டர் தழும்பினுள் ஆழமாக ஊடுருவி, புதிய செல்களைத் தூண்டும்.

கோகோபட்டரை தழும்பின் மீது மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மறு நாள் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் விரைவில் பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அமிலத்தன்மை தழும்பில் தங்கியிருக்கும் இறந்த செல்களை உடனடியாக நீக்கிவிடும். புதிய செல்களைத் தோற்றுவிக்கும். சம அளவு நீரும் வினிகரும் கலந்து, தழும்பின் மீது தேயுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, கழுவவும். இவற்றுடன் தேன் கலந்தும், தடவலாம், விரைவில் தழும்பு மறையும்.

தேயிலை மர எண்ணெய் : 2 ஸ்பூன் நீரில் 4 துளி தேயிலை மர எண்ணெயை கலந்து தழும்பின் மீது தடவலாம். அல்லது தேயிலை எண்ணெயுடன் சம அளவு பாதாம் எண்ணெயை கலந்து தழும்பில் போட்டு மசாஜ் செய்யலாம். அரை மணி நேரம் கழித்து, கழுவிவிடுங்கள்.

தேயிலை மர எண்ணெயை தனியாக உபயோகிப்பதை தவிர்க்கவும். அதிலுள்ள அமிலத்தன்மை சருமத்தில் எரிச்சல் தரும்.

scar 07 1467873862

Related posts

இரவில் ஆலிவ் எண்ணெய்யில் மசாஜ் செய்யுங்கள்! சருமம் ஜொலிக்கும்

nathan

கருப்பாக காணப்படும் கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ்…

nathan

சரும நோய்களை தீர்க்கும் கேரட்

nathan

இடுப்பு, கழுத்து, அக்குள் பகுதிகளில் கருமை மறைய டிப்ஸ் tamil beauty tips

nathan

உங்கள் அழகை அதிகரிக்க ஒரு சிம்பிள் வழி சொல்லட்டுமா? நீங்கள் முப்பதுகளில் இருக்கிறீர்களா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த சோப்பு உங்களுக்கு வயதாவதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்குமாம்…

nathan

கிர்ணி பழ பேஸ்பேக் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது

nathan

குளியல் பொடி

nathan

amazing beauty benefits lemon அழகா ஜொலிக்கணுமா? எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.

nathan