அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முடி உதிர்வு, தலை அரிப்பை போக்கும் பலாக்கொட்டை

2954b1b2-c93e-4924-b8cf-efe977e1d7b1_S_secvpfபழங்கள் என்றாலே ருசியுடன் கூடிய ரசனை நம் அனைவரையும் ஈர்ப்பதில் அதிசயம் ஏதுமில்லை. நாவுக்கு வேண்டிய ருசியை அளிப்பதோடு, உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களையும், அளிப்பதில் பழங்களே முதன்மை வகிக்கிறது. பழ வகைகளில் மா, பலா, வாழைக்கு முக்கிய இடம் உண்டு. இனிக்க இனிக்க சுவை தரக்கூடிய பழ வரிசைகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கும் பலாப்பழத்தால் ஏற்படும் பலாபலன் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

* பலாவின் வேர், இலை, காய், பழம் என அத்தனையும் அழகுக்கான மூலதனம் தான். ஒவ்வொன்றும் நம் அகத்தையும் புறத்தையும் அழகாக்கும் வல்லமை பெற்றவை. அரிப்பு, அலர்ஜி போன்றவற்றால் தோலில் வறட்சி ஏற்பட்டு முகம் முரடு தட்டிப்போவது. அம்மை தழும்பு அகலாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு பலா இலை அருமையான மருந்து, இளசான பலா இலைகளை தணலில் இட்டு சாம்பலாக்க வேண்டும். அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து, அலர்ஜி, அரிப்பு ஏற்பட்ட இடத்திலோ தழும்பிலோ தடவி வந்தால், ஓரிரு நாட்களில் அதன் தடயம் மறைந்து, அழகு தவழ ஆரம் பித்துவிடும்.

* தொடர்ச்சியான முடி உதிர்வு, தலையில் அரிப்பு போன்ற தொந்தரவால் துவண்டு போகிறவர்களுக்குப் பலன் தருகிறது பலாக்கொட்டை. இதை காயவைத்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பவுடர் அரை டீஸ்பூன், பயத்தமாவு ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் 2 டீஸ்பூன்… இந்த மூன்றையும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் சேர்த்துக் குழைக்க வேண்டும். தேவைப்பட்டால் அதில் சிறிது வெந்நீரையும் சேர்த்து, தலையில் பூசி 10 நிமிடம் ஊறவிடுங்கள். பிறகு சீயக்காய் அல்லது ஷாம்பூவால் தலையை அலசினால் அரிப்பு குறைந்து, முடி கொட்டுவது நிற்கும். அடுத்து முடி வளர ஆரம்பிக்கும்.

* எண்ணெய்ப் பசை இல்லாமல் சோர்ந்து போயிருக்கும் கண்களை பளபளப்பாக்குவதில் பலாச்சுளைக்கு பெரும்பங்கு இருக்கிறது. பழுக்காத நிலையில் இருக்கும் ஒரு பலாச்சுளையை மிக்ஸியில் அரைத்து, அந்த விழுதை கண்களின் மேல் பூசுங்கள் 5 நிமிடம் கழித்து எடுத்தால் கண்கள் பொலிவு பெறும். சளியினால் மூக்கு நுனியில் ஏற்படும் வீக்கத்தையும் இந்த பேஸ்ட் போக்கும். (அரைக்கும் போது தேவைப்பட்டால் இதனுடன் சிறிது பாலையும் சேர்த்து குழைத்தக் கொள்ளலாம்).

* ஐம்பது வயதைத் தாண்டினால் கழுத்துப் பகுதியில் நரம்பு புடைத்து, சுருக்கங்கள் தோன்றும். அதைத் தவிர்க்க பாதி பலாச்சுளை, ஒரு வாழைப்பழத்துண்டு, கடலைமாவு ஒரு டீஸ்பூன், பால் ஒரு டீஸ்பூன்… அனைத்தையும் நன்றாக மசித்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை கழுத்துப் பகுதியில் தடவுங்கள். இந்த பேஸ்ட் சீக்கிரத்தில் உலராது. அதனால் அரைமணி நேரம் ஊறவிட்டு கழுவினாலே போதும், தொய்வு நீங்கி கழுத்துப் பகுதி எடுப்பாக இருக்கும்.

* ஹேர் டை சிலருக்கு சருமத்தில் கறுப்புத் திட்டுக்களை உண்டாக்கி விடும். தோலின் நிறமும் மாறிவிடும். இந்தப்பிரச்னைக்கு பலா வேர் உதவுகிறது. பலா வேரையும் வெட்டிவேரையும் சம அளவு எடுத்து வெயிலில் உலர்த்தி, அதனுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்த மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை சிறிது தண்ணீரில் குழைத்து, திட்டுக்கள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால், தோலின் கருமை மறைந்து, மின்னும்.

* எவ்வளவு தான் எண்ணெய் தடவினாலும், செம்பட்டை முடி கருமையாகவில்லையா? பலா இலை, செம்பருத்தி, நெல்லி முள்ளி, கறிவேப்பிலை இவற்றை ஒரே அளவில் எடுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளுங்கள். இதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென கண்ணைக் கவரும்.

* அழகான நகம் அடிக்கடி உடைந்து போகிறதாப பலாப்பழத் தோலின்மேல்புறம் உள்ள முள் பகுதியை மட்டும் சீவிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் நன்றாக காயவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து, நகங்களில் பூசி வந்தால், நக வளர்ச்சி சீராக இருக்கும். அடிக்கடி நகங்கள் உடைவதும் குறையும்.

* பலாச்சுளை ஊறிய தேனை முகம் மற்றும் கைகளில் பூசி, பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால் பளபளப்பு கூடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button