ஆரோக்கிய உணவு

ஓமம் மோர்

தேவையான பொருட்கள் :
தயிர் – 200 மி.லி.
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
தாளிக்க :
ஓமம் – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – அரை தேக்கரண்டி

செய்முறை :
* தயிரில் அரை லிட்டர் தண்ணீர் கலந்து அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
* வாணலியில் எண்ணெய் உற்றி ஓமம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும்.
* பின்பு அதில் கடைந்து வைத்த மோரை ஊற்றி சிறு தீயில் சுட வைக்கவும்.
* மோர் முறிய ஆரம்பிக்கும் போது தீயை அணைத்து விடவும்,
* இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், குடிக்கவும் செய்யலாம். இது பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது.oma

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button