29.5 C
Chennai
Tuesday, May 21, 2024
47e0bdb1 8d3f 4c17 8d1e 1300c6de8532 S secvpf
அசைவ வகைகள்

ஆந்திரா கோங்குரா சிக்கன்

தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ
புளிச்சக்கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு நறுக்கியது – தலா 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.

* கீரையை நன்றாக மண் போக அலசிய பின்பு இலையின் காம்பை நறுக்கி எடுத்து கீரையை மட்டும் உபயோகிக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் விட்டு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கிய பின் சுத்தம் செய்து வைத்துள்ள கீரை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* நன்கு வதங்கிய பின் ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து சிவற வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

* மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கிய பின் கிக்கனை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாதூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.

* சிக்கன் சுவைக்கு உப்பு சேர்க்கவும்.

* அரை கப் தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி வேக விடவும்.

* சிக்கன் முக்கால் பாகம் வெந்த பின்பு தயார் செய்த அரைத்த கோங்குரா விழுதை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும்.

* நல்ல கொதித்து சிக்கனும் கீரை விழுதும் சேர வேண்டும். கீரையே புளிக்கும், தயிரோ தக்காளியோ சேர்க்க தேவையில்லை. இதற்கு காரம், உப்பு சிறிது அதிகமாகத் தேவைப்படும். விரும்பினால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

* சுவையான ஆந்திரா கோங்குரா சிக்கன் ரெடி.

* இது சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் பரிமாறலாம். 47e0bdb1 8d3f 4c17 8d1e 1300c6de8532 S secvpf

Related posts

வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி

nathan

மட்டன் கடாய்

nathan

மட்டன் சுக்கா வறுவல் செய்ய….!

nathan

நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

உருளைக்கிழங்கு முட்டைக்கறி

nathan

சிக்கன் ரோஸ்ட்

nathan

சுவையான…. மட்டன் சுக்கா

nathan

மசாலா ஆம்லெட்

nathan

கொங்கு நாட்டு கோழி குழம்பு

nathan