அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

கால்களின் அழகு மீன்களுக்கு தெரியும்

ld1015குளத்தங்கரையிலோ, ஆற்றங்கரையிலோ குளித்த அனுபவமுள்ளவர்களுக்கு, மீன்கடி அனுபவமும் நிச்சயம் இருக்கும். கிச்சுகிச்சு மூட்டுகிற மாதிரி கால்களைச் சூழ்ந்து கொள்ளும் மீன்கள். குளிக்கிறவர்களின் உடம்பிலுள்ள அழுக்குகளைத் தின்று, சருமத்தை சுத்தமாக்குவதுதான் அந்த மீன்களின் வேலை.

நகரத்து வாசிகளுக்கு ஆறாவது… குளமாவது அப்புறம் எப்படி மீன் கடி அனுபவம் தெரியப் போகிறது அலுத்துக் கொள்ளாதீர்கள். மீன்களிடம் கால்களைக் கொடுக்க, ஆறு, குளம் தேடித்தான் போக வேண்டுமா என்ன பியூட்டி பார்லர் போதுமே…யெஸ்… சிங்கப்பூரில் பிரபலமான ‘ஃபிஷ் பெடிக்யூர்’ இப்போது சென்னைக்கும் வந்து விட்டது.

மீன்களை வைத்து செய்யப் படுகிற பிஷ் பெடிக்யூர் பற்றி விவரமாகப் பேசுகிறார் பிரபல அழகுக் கலை நிபுணர் வீணா குமாரவேல்.ஆற்றுத் தண்ணீர்ல கால் வச்சா மீன் கடிக்குங்கிறதும், கால்கள்ல உள்ள அழுக்கு நீங்கி சுத்தமாகுங்கிறதும் நமக்கெல்லாம் தெரிஞ்சதுதான். அந்த அடிப்படைல செய்யறதுதான் ஃபிஷ் பெடிக்யூர். சிங்கப்பூர், மலேசியால பிரபலமா இருந்த இந்த ஃபிஷ் பெடிக்யூரை நம்மூர்ல அறிமுகப்படுத்தினப்ப, எக்கச்சக்க வரவேற்பு.

இதுக்காக உபயோகிக்கப் படற குரா ரூஃபா மீன்களுக்கு டாக்டர் ஃபிஷ்னு ஒரு பெயர் இருக்கு. ஒரிசாலேருந்து வரவழைக்கிற இந்த மீன்களுக்கு, சரும நோய்களை குணப்படுத்தற சக்தி உண்டுனு பல வருஷங்களுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சிருக்காங்க.. விளக்கத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், ஃபிஷ் பெடிக்யூரின் அருமையைப் புரிய வைக்க, அதை இரண்டு இளம் பெண்களுக்குச் செய்ய வைத்தும் காட்டினார் வீணா.

ஒரு கண்ணாடித் தொட்டிக்குள் கூழாங்கற்களும், மணலும் நிரப்பி, அதன் மேல் பளிங்கு மாதிரி தண்ணீர். அதற்குள் தங்கமும், பழுப்பும் கலந்த குரா ரூஃபா மீன்கள்… வாடிக்கையாளர் அந்தத் தண்ணீருக்குள் 20 நிமிடங்கள் கால்களை வைக்க வேண்டும். கால் வைத்ததுமே மீன்கள் சூழ்ந்து கொண்டு, கிச்சுக்கிச்சு காட்ட ஆரம்பித்து விடும். அதாவது மீன்கள் தமது சிகிச்சையை ஆரம்பித்து விடும்.

நக இடுக்கு, குதிகால் ஓரங்கள், விரல் நுனிகள், பாதங்கள் என எல்லாப் பகுதிகளையும் சூழ்ந்து கொண்டு, சுத்தப்படுத்திய பிறகு, தாமாகவே மீன்கள் விலகிவிடுகின்றன. உடனே தொட்டித் தண்ணீர் மாற்றப் படுகிறது. கால்கள் பளீரென மாறுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்டவருக்கு வழக்கமான பெடிக்யூர் சிகிச்சை தொடரப்படுமாம்.

வழக்கமாக பெடிக்யூரில் கைகளால்தான் கிளீனிங்கும், ஸ்க்ரப்பிங்கும் செய்வார்கள். ஃபிஷ் பெடிக்யூரில், அந்த வேலையை மீன்களே செய்து விடுவதுதான் ஹைலைட்முழு சிகிச்சையும் முடிந்ததும், ரோஜா நிறத்தில் பட்டு போல அழகாக மாறிவிடுகின்றன கால்கள்.
‘ஒன்ஸ் மோர் ட்ரை பண்ணலாமா மேடம்.. மாடல் பெண்கள் ஆர்வத்துடன் கேட்க, அவசரமாகத் தயாராகின அடுத்த செட் அழகு மீன்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button