veppampoo 3070252f
சைவம்

வேப்பம்பூ சாதம்

என்னென்ன தேவை?

பச்சரிசி – ஒர் ஆழாக்கு

வேப்பம்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

கடுகு, உளுந்து, துவரம் பருப்பு

– தலா ஒரு டீஸ்பூன்

இஞ்சி – சிறு துண்டு

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசியைக் களைந்து உதிரியாக வடித்துவையுங்கள். வெறும் வாணலியில் மிளகு சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்துப் பின் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து வெடித்ததும், உளுந்து, கடலைப் பருப்பு தாளித்து சாதத்தில் கொட்டுங்கள்.

மீதி நல்லெண்ணெய் விட்டு வேப்பம்பூ சேர்த்து, மிதமான தீயில் வேப்பம்பூ மொறுமொறுவென்று ஆகும்வரை பதமாக வறுத்து, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து சாதத்தில் சேர்த்துக் கலக்குங்கள். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட்டுப் பித்தம் அதிகமாகி தலை சுற்றல், வாந்தியால் அவதிப்படுகிறவர்கள் இந்த வேப்பம்பூ சாதம் சாப்பிட்டால் சரியாகும். பித்தம் வருமுன் காக்க வாரம் ஒரு முறையாவது இதைச் சாப்பிட்டு வரலாம்.veppampoo 3070252f

Related posts

கோயில் புளியோதரை

nathan

வேர்க்கடலை குழம்பு

nathan

காலிபிளவர் மிளகு வறுவல்

nathan

எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி

nathan

பேச்சுலர் சாம்பார்

nathan

கலவை காய்கறி மசாலா

nathan

சிம்பிளான… உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

பன்னீர் பட்டாணி மசாலா

nathan

சத்தான சுவையான பருப்பு திணை கிச்சடி

nathan