சிற்றுண்டி வகைகள்

சத்தான முடக்கத்தான் – கம்பு தோசை

முடக்கத்தான் கீரை, கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அது இரண்டையும் வைத்து எப்படி தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான முடக்கத்தான் – கம்பு தோசை
தேவையான பொருட்கள் :

கம்பு – 1 கப்
முடக்கத்தான் கீரை – 1 கட்டு
உளுத்தம் பருப்பு – கால் கப்
ப.மிளகாய் – 3
வெந்தயம் – 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய், உப்பு

செய்முறை :

* கம்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

* காலையில் உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

* முடக்கத்தான் கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கம்பு, உளுந்தை சேர்த்து நைசாக அரைத்த பின் அதனுடன் முடக்கத்தான் கீரை, ப.மிளகாய் சேர்த்து மீண்டும் அரைத்து உப்பு சேர்த்து கரைத்து புளிக்க விடவும்.

* புளித்த மாவில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான முடக்கத்தான் – கம்பு தோசை ரெடி.

* கம்பில் உள்ள நார்ச்சத்தும், சுண்ணாம்பு சத்தும் கிடைப்பதோடு முடக்கத்தான் கீரையால் மூட்டு வலியும் குறையும்.201611091208593272 mudakathan keerai bajra dosa SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button