உடல் பயிற்சி

வாயு தொந்தரவை தீர்க்கும் ஜானு சிரசாசனம்

வாயு தொந்தரவு, வயிறு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

வாயு தொந்தரவை தீர்க்கும் ஜானு சிரசாசனம்
செய்முறை :

விரிப்பில் உட்கார்ந்து கொண்டு இடது காலை நேராக நீட்டவும், கால் இடையிலோ, மூட்டுப்பக்கமோ மடியலாகாது குதிகால் நன்கு தரையில் பதிய கால் விரல்கள் மேல் நோக்கி இருக்க சாய்வே இல்லாமல் உங்கள் உடல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

சுருக்கமாக சொன்னால் மடித்த வலது காலும் நீட்டிய இடது காலம் பார்க்கும் போது ஆங்கில எழுத்தான L வடிவில் இருக்க வேண்டும் இப்படி வலது காலை மடித்து அழுத்தியவாறே இரண்டு கைகளாலும், நீட்டி இருக்கும் இடது காலின் நடுப்பாதத்தை கெட்டியாக பிடித்து தலையை சற்று மேலே தூக்கியிருக்கும் படி செய்யவும்.

பின்பு தலையை குனிந்து முகத்தை நீட்டியுள்ள முழங்காலின் மீது வைக்க வேண்டும். இந்த நேரத்தில் மூச்சை உள்ளிழுக்க வேண்டாம். வெளியே விட வேண்டாம். குனியும் போது மூச்சை வெளியே விட்டவாறே மெதுவாக குனியவும். முகத்தை நிமிர்த்தும் போது மூச்சை உள்ளிழுத்தவாறே நிமிரவும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

பலன்கள் :

தினசரி மூன்று நிமிடம் இரு கால்களையும் மாற்றி, மாற்றி செய்தால் அற்புதபலன் கிடைக்கும். விலா எலும்பு உறுதியடையும். வாயு தொந்தரவு நீங்கும். உடல் நல்ல நெகிழ்ச்சி அடையும்.

கணையம், கல்லீரல், மண்ணீரல், கணையம் முதலியன நன்கு வேலை செய்யும். அடி வயிறு இழுப்பதால் தொந்தி நன்கு கரையும். முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் இருந்தால் மறைந்துவிடும்.

வாயு தொந்தரவு நீங்கும். வயிற்றுப் பகுதியின் ரத்த ஓட்டம் அதிகப்படும். சிறுகுடலும், பெருங்குடலும் (தசை நாண்கள்) இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். அதனால் எந்தவித மலச்சிக்கலும் தீரும்.201611111251183589 Gas trouble stomach disorder control janu sirsasana SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button