28.6 C
Chennai
Friday, May 17, 2024
corn chees toast 16 1455622524
சிற்றுண்டி வகைகள்

கார்ன் சீஸ் டோஸ்ட்

குழந்தைகளுக்கு கார்ன் மிகவும் பிடிக்கும். அதே சமயம் அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே மாலையில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சீஸ் மற்றும் கார்னைக் கொண்டு அற்புதமான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள். இதனால் அவர்களது பசி அடங்குவதோடு, அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இங்கு கார்ன் சீஸ் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பிரட் – 6 துண்டுகள் வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) வேக வைத்த ஸ்வீட் கார்ன் – 1/2 கப் துருவிய சீஸ் – 1/2 கப் காய்ச்சிய பால் – 3/4 கப் மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் மைதா – 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதா சேர்த்து சில நொடிகள் கிளறி, பின் பால் ஊற்றி நன்கு சாஸ் போன்று ஓரளவு கெட்டியான பதத்தில் வரும் வரை கிளறி, பின் அதில் காய்கறிகளை சேர்க்க வேண்டும். பிறகு அதனை நன்கு கிளறி, சீஸ் சேர்த்து உருக வைக்கவும். சீஸ் உருகியதும், அடுப்பை அணைத்து விட வேண்டும். அடுத்து பிரட் துண்டுகளை நெய் தடவி தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து கொள்ளவும். இறுதியில் ஒவ்வொரு பிரட் பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்திலும், கார்ன் கலவையைப் பரப்பி பரிமாறினால், கார்ன் சீஸ் டோஸ்ட் ரெடி!!!

corn chees toast 16 1455622524

Related posts

சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை

nathan

பனீர் குடைமிளகாய் பராத்தா

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

மசாலா பூரி

nathan

சுவையான சரவண பவன் கைமா இட்லி

nathan

சுவையான உப்பு சீடை

nathan

தித்திக்கும்… அவல் கொழுக்கட்டை

nathan

பார்லி பொங்கல்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் பக்கோடா

nathan