சரும பராமரிப்பு

பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

பொதுவாக பனிக்காலத்தில் சருமம் வறண்டு செதில் படிந்து காணப்படும். இதனால் முகம் மற்றும் உதடு பகுதிகளில் அவலட்சணமான தோற்றம் ஏற்படும். இந்த பிரச்சனையிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவு பெறும். பாலாடையுடன் கசகசாவை ஊறவைத்து அரைத்து முகம் மற்றும் கை கால்களில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிப்பதும் சருமத்தை மென்மையாக்கும்.

வறண்ட சருமக்காரர்கள் பப்பாளி ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும். எல்லா வகை சருமத்தினரும் தண்ணீர் அதிகமாக குடிக் வேண்டும். அரை கிலோ துவரம் பருப்பு 100கிராம் பயத்தம் பருப்பு, 25 கிராம் கசகசா, 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் இவற்றை மெலியதாக அரைத்துக்கொள்ளவும்.

இந்த கலவையை தினந்தோறும் முகம் முதல் பாதம் வரை தேய்த்து குளிக்கவும். தொடர்ந்து இவ்வாறு 1மாதம் செய்து வந்தால் தோலின் வறட்டு தன்மை நீங்கி மிருதுவாக ஜொலிக்கும்.பனிக்காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பனிக்காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது.

அது சருமத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச எண்ணெய் பசையையும் உறிஞ்சிவிடும்.மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு, போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து குளித்து வரவேண்டும்.

கரு வளையம் உள்ளவரா நீங்கள்?

கண்ணின் கருவளையம் போக்க உருளைக்கிழங்கு சாறு போதுமானது. அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருளிலிருந்தே நாம் நம்மை அழகு படுத்திக்கொள்ளலாம். உருளைக்கிழங்கை தோலை நீக்கி நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை கண்ணைசுற்றி மெதுவாக வைக்கவும். நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கண்ணை கழுவவும். இந்த முறையை வாரம் இருமுறை செய்து வந்தால் கண்ணின் கருவளையம் நன்றாக மாறிவிடும். EkNzBMR

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button