கேக் செய்முறை

ஜெல்லி கேக்

உங்களுக்கு சமையல் மீது அலாதி விருப்பமா? அதிலும் வித்தியாசமாக சமைக்க முயற்சிப்பவரா? அப்படியெனில் இந்த விடுமுறை நாட்களில் ஓர் அற்புதமான ஜெல்லி கேக்கை வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த ஜெல்லி கேக்கின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: மைதா – 1 1/4 கப் பேக்கிங் பவுடர் – 1 1/4 டீஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை சர்க்கரை – 1/2 கப் வெண்ணெய் – 125 கிராம் வென்னிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன் பால் – 1/2 கப் முட்டை – 1

டாப்பிங்கிற்கு… ஜெல்லி பாக்கெட் – 1 தண்ணீர் – 450 மிலி தேங்காய் பொடி – 2 கப்

செய்முறை: முதலில் ஜெல்லி பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ளவாறு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்கவிட வேண்டும். பின் ஒரு பௌலில் ஜெல்லி பொடியைப் போட்டுக் கொள்ளவும். பின்னர் அதில் அந்த சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி, ஃப்ரிட்ஜினுள் வைத்து குளிர வைக்கவும். முக்கியமாக ஜெல்லி கெட்டியாகாமல் நீர்ம நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பின் மைக்ரோ ஓவனை 180 டிகிரியில் சூடேற்றிக் கொள்ளவும. பின் நான்-ஸ்டிக் மஃபின் பேனில் (nonstick muffin pan) எண்ணெயை தடவிக் கொள்ளவும். பின்பு ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு மற்றொரு பௌலில் வெண்ணெய் போட்டு, அத்துடன் வென்னிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். அடுத்து, மைதா கலவையை மூன்றாக பிரித்து, ஒரு பகுதியை வெண்ணெய் கலவையுடன் சேர்த்து கிளறி, சிறிது பால் ஊற்றி நன்கு கிளறவும். பின்னர் மற்றொரு மைதா பகுதியை சேர்த்து கிளறி, மீண்டும் சிறிது பால் ஊற்றி கிளறவும். அடுத்து மீதமுள்ள மைதாவை சேர்த்து கிளறி, எஞ்சிய பாலையும் ஊற்றி நன்கு கட்டிகள் சேராதவாறு கிளறி விடவும். இறுதியில் அந்த மஃபின் பேனில் ஒரு டேபிள் ஸ்பூன்களால் இந்த கலவையை வைத்து, மைக்ரோ ஓவனில் வைத்து 15/20 நிமிடம் பேக் செய்து இறக்கி, தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த மஃபினை ஜெல்லி நீரில் மூழ்கி எடுத்து, தேங்காய் பொடியில் பிரட்டி எடுக்கவும். இதேப் போன்று அனைத்தையும் செய்தால், ஜெல்லி கேக் ரெடி!!!

jelly cake 19 1455879760

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button