சைவம்

மிளகு மோர்க்குழம்பு

இந்த மோர்குழம்பில் மிளகு சேர்ப்பதால் சளி தொல்லை இருப்பவர்களும் சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மிளகு மோர்க்குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சேனைக்கிழங்கு – 100 கிராம்,
அரிசி – ஒரு டீஸ்பூன்,
மிளகு – 20,
கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மோர் – 250 மில்லி,
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* சேனைக்கிழங்கை வேக வைத்து தோல்நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு மிளகை வறுத்துக்கொள்ளவும்.

* மிளகுடன் அரிசி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மிளகு – அரிசி கலவை, வேகவைத்த சேனையையும் சேர்த்து, லேசாக கொதிக்க விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாள், வெந்தயத்தை போட்டு தாளித்துச் மோரில் சேர்த்து இறக்கவும்.

* சுவையான மிளகு மோர்க்குழம்பு ரெடி.

குறிப்பு: ரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உடையது மிளகு… நோய்களை குணப்படுத்தும் சக்தியும் வாய்ந்தது.201607280737270488 how to make pepper mor kulambu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button