30.8 C
Chennai
Monday, May 12, 2025
28 1438084809 8 urinary
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்!!!

28 1438084809 8 urinary
இந்திய மக்கள் மன அழுத்தத்திற்கு அடுத்தப்படியாக நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் உலகிலேயே சர்க்கரை நோயினால் தான் அதிக மக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோய் வருவதற்கு பரம்பரை, மன அழுத்தம், உணவுப் பழக்கம், நார்ச்சத்து குறைபாடு போன்ற பல காரணமாக இருக்கின்றன.

நீரிழிவு என்பது ஒரு இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் தான். பொதுவாக கணையம் இன்சுலினை சுரந்து, இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும். ஆனால் நீரிழிவு பிரச்சனை ஏற்பட்டால், போதிய அளவில் இன்சுலின் சுரக்காமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாகும்.

சரி, உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா? எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு சர்க்கரை நோய் இருந்தால் தென்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

சர்க்கரை நோய் இருந்தால் தென்படும் அறிகுறிகளில் ஒன்று, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஏனெனில் குளுக்கோஸானது உறிஞ்சப்படாமல், சிறுநீரின் வழியே அடிக்கடி வெளியேற்றப்படுகிறது. இதனால் உடலில் விரைவில் வறட்சி ஏற்படும். எனவே அந்த அறிகுறி தென்பட்டால், இரத்த பரிசோதனையை மேற்கொண்டு பாருங்கள்.

தண்ணீர் தாகம்

தண்ணீர் தாகம் அதிகம் ஏற்பட்டால், குறிப்பாக சிறுநீர் கழித்த உடனேயே தாகம் ஏற்பட்டால், மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஏனெனில் இது சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று.

திடீர் எடை குறைவு

உடற்பயிற்சி, டயட் போன்ற எதுவும் மேற்கொள்ளாமல், திடீரென்று உங்கள் உடலின் எடை குறைந்தால், அதுவும் சர்ச்சரை நோய் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

சோர்வு

உடலின் சீரான செயல்பாட்டிற்கு எனர்ஜி மிகவும் முக்கியமானது. ஆனால் நீங்கள் பல நாட்களாக மிகுந்த சோர்வை உணர்ந்தால், மருத்துவரை உடனே சந்தித்து, உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பார்வை கோளாறு

நீரிழிவு இருந்தால், பார்வை கோளாறு ஏற்படும். ஏனெனில் சர்க்கரை நோயானது வந்தால், அது கண்களை பாதித்து கண் அழுத்த நோய், கண்புரை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

சரும பிரச்சனைகள

் சர்க்கரை நோய் வந்தால், சரும பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு சரும பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், மருத்துவரை சந்திக்கவும்.

அதிகமாக சாப்பிடுவது

உங்களுக்கு ஒன்று தெரியுமா? சர்க்கரை நோய் இருந்தால், எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றும். மேலும் அடிக்கடி அதிகம் பசிக்க ஆரம்பிக்கும்.

சிறுநீர் பாதை தொற்றுகள்

அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றுகளை சந்தித்து வந்தால், அதுவும் நீரிழிவிற்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே இந்த மாதிரியான பிரச்சனையை சந்தித்தால், அதைப் புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை சந்தித்து சோதனை செய்து கொள்ளுங்கள்.

40 வயதை எட்டியவரா? உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா? உங்கள் குடும்பத்தினர் யாருக்கேனும் நீரிழிவு இருந்திருக்கிறதா? அப்படியெனில் தவறாமல் இரத்த பரிசோதனை செய்து பாருங்கள். ஏனெனில் நீரிழிவானது எந்த வயதிலும் ஒருவருக்கு வரலாம்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்!!

nathan

கை கால் எரிவுக்கான -சித்த மருந்துகள்

nathan

30 வயதிற்கு மேல் ஆண்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவைகள்!!!

nathan

உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?தெரிந்துகொள்வோமா?

nathan

அவசியம் படிக்க.. பற்கள் சிதைவடைய ஆரம்பிக்க போகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..!

nathan

நீர்க்கட்டிகள் நோய் அல்ல!

nathan

40 வயதில் பெண்களை தொடரும் பல்வேறு பிரச்சனைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

nathan

வறண்ட நிலத்தின் பொக்கிசம்…..

sangika