அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்திற்கான க்ளென்ஸிங் – அழகு குறிப்புகள்

முகத்திற்கான க்ளென்ஸிங் – அழகு குறிப்புகள்

Description:

imagesஉங்கள் முகத்தை எப்போதாவது கண்ணாடியில் பார்த்து இருக்கிறீர்களா….. உங்கள் சருமம் உலர்ந்த சருமமா அல்லது எண்ணெய் சருமமா அல்லது மந்தமான சருமமாக இருக்கிறதா அல்லது ஒளிரும் மற்றும் கதிரியக்க சருமமாக தெரிகிறதா என்று பார்த்து இருக்கிறீர்களா?
இவை எல்லாம் நீங்கள் உங்கள் முகத்தை எப்படி நன்கு பக்குவமாக பார்த்து கொள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது. உங்கள் காலைப் பொழுதில் சருமத்தினை கவனிக்க தினமும் 15 நிமிடங்கள் மற்றும் படுக்கை நேரத்தில் 15 நிமிடங்கள் ஒதுக்குவதில் இருந்து தொடங்குங்கள்.

குறிப்பு 1:
காய்ச்சாத‌ பால் 1 தேக்கரண்டி எடுத்து கொண்டு, ஒரு பருத்தி துணியை இதில் நனைத்துக் கொண்டு உங்கள் முகம் முழுவதும் மிருதுவாக தேய்க்கவும், வட்ட இயக்கத்தில் தேய்க்கவும், கழுத்து பகுதியில் மேல்நோக்கியும் தேய்க்கவும். இதை அப்படியே 15 நிமிடம் விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
குறிப்பு 2:
ஒரு தடிமனான துண்டு வெள்ளரி எடுத்து கொள்ளவும். துண்டினை தோலுரிக்க வேண்டாம், இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளிலும் வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு இதை கழுவ வேண்டும்.
குறிப்பு 3:
பாதி தக்காளி எடுத்துக் கொண்டு மெதுவாக முகம் மற்றும் கழுத்து முழுவதும் மேல் நோக்கி தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
குறிப்பு 4:
பாதி எழுமிச்சம் பழம் எடுத்துக் கொண்டு இதை சாறு எடுத்துக் கொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்தில் நன்கு தேய்க்கவும். இந்த ஸ்கரப்பாக பயன்படுத்தலாம்'(3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்)
இதை கழுவிய பின், பால் அல்லது சாறு எடுத்துக் கொண்டு – ஓட்ஸ் அல்லது கோதுமை உமி அல்லது கடலை மாவு எடுத்துக் கொண்டு, இவற்றில் ஒரு தேக்கரண்டி நீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து இதை மெதுவாக முகம் மற்றும் கழுத்தில் தடவவும். இதை பயன்படுத்துவதால் இறந்த செல்களை நீக்குவதோடு, முகத்திற்கு ஒரு ஒளியை கொடுக்கிறது. இதை கழுவ சோப்பு பயன்படுத்த கூடாது, குளிர்ந்த நீரால் நன்கு அடித்துக் கழுவினாலே போதும், தேவையற்ற துளைகளை  மூட உதவும்.
குறிப்பு 5:
தயிரில் பாசிபயறு தூள் அல்லது அரிசி மாவு கலந்து பயன்படுத்தவும்.
எண்ணெய் தோல்: முகம் பிசுபிசுப்பாக‌ இருந்தால்,
குளித்த பின் முகத்திற்கு ஒப்பனை போடும் முன் சிறிதளவு எழுமிச்சை சாறு கொண்டு தேய்த்து விட்டு போடலாம், அது எந்த் விதமான ஒப்பனையாக இருந்தாலும் இப்படி செய்வது மிகவும் நல்லது.
குறிப்பு 6:
நீர்த்துப்போன மோரை முகத்தில் போட்டு முகத்தில் அப்படியே 15 நிமிடம் விடவும், இதை ஈரமான காட்டன் கொண்டு துடைத்து விட்டு முகத்திற்கு ஒப்பனை போட்டால் பளிச்சென்று இருக்கும்.
குறிப்பு 7:
ஒரு ஐஸ் கட்டி கொண்டு நன்கு தேய்த்து விட்டும் முகத்திற்கு ஒப்பனை போடலாம்.
குறிப்பு: 8
மெல்லிய துண்டுகளாக ஒரு ஆப்பிள் வெட்டிக் கொள்ளவும். இதை முகத்தில் வைத்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். இப்படி செய்வதால் இது முகத்தில் நன்கு ஊறி கூடுதல் எண்ணெய் உறிஞ்சுவதோடு மற்றும் மற்றும் துளைகள் மூட உதவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button