சிற்றுண்டி வகைகள்

சூப்பரான பொரித்த இனிப்பு மோதகம்

மைதா அல்லது கோதுமை மாவில் செய்த கொழுக்கட்டையை எண்ணெயில் பொரித்தால் சூப்பாரான இருக்கும். இது வட இந்தியாவில் மிகவும் பிரபலம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான பொரித்த இனிப்பு மோதகம்
தேவையான பொருட்கள் :

மேல் மாவிற்கு :

கோதுமை மாவு அல்லது மைதா – 1 கப் (குவித்து அளக்கவும்)
நெய் அல்லது எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – ஓரு சிட்டிகை

பூரணத்திற்கு :

தேங்காய்த்துருவல் – 1 கப்
வெல்லம் பொடித்தது – 3/4 கப்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :

* மைதாவை நன்றாக சலித்து விட்டு, அத்துடன் உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு கலந்து அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

* வெல்லத்தில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.

* ஒரு பெரிய நெல்லிக்காயளவு மாவை எடுத்து, மெல்லிய பூரியாக இட்டு, அதன் நடுவில் சிறிதளவு பூரணத்தை வைத்து, எல்லா மூலைகளையும் சேர்த்து, மேல் பாகத்தை நன்றாக அழுத்தி விட்டு மோதகம் செய்து கொள்ளவும். எல்லா மாவையும் இப்படியே செய்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், 4 அல்லது 5 மோதகங்களை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* இப்போது சூப்பரான பொரித்த இனிப்பு மோதகம் ரெடி.

* இதை மைதா மாவிற்குப் பதில் கோதுமை மாவை உபயோகித்தும் செய்யலாம்.201611190920309602 sweet fried modak SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button