முகப் பராமரிப்பு

மூக்கின் மேல் வெண் புள்ளிகளா? தீர்க்க இத செய்யுங்க

சருமத்தில் கரும்புள்ளி, முகப்பரு, தேமல், மங்கு, வெண்புள்ளி என நிறைய பிரச்சனைகளை நாம் சந்திக்காமலில்லை. கரும்புள்ளி, முகப்பருக்களுக்கு நிறைய தீர்வுகளை பார்த்திருக்கிறோம்.

சிலருக்கு மூக்கின் மேலும், உதட்டிற்கு கீழ், நாடியிலும், வெள்ளைப் புள்ளிகள் தென்படும். கரும்புள்ளிகள் போல் அசிங்கமாக இல்லாவிட்டாலும், இந்த வெண்புள்ளிகளும் கிருமிகளால் வரக் கூடியதே. அழுக்கு, கிருமி , இறந்த செல்கள், எண்ணெய் ஆகியவை ஒன்றாக கலந்து, வெண்புள்ளிகளாக ஆரம்பிக்கும்.

அதனை பார்லரில் சென்று நீக்கிவிடலாம். ஆனல் அந்த சிகிச்சை வலிமிகுந்தது. திரும்பவும் வந்துவிடும். இதனை போக்குவதற்கு மிக எளிதான ஒரு டிப்ஸ் உள்ளது. வலியில்லாதது. பக்க விளைவுகளும் இல்லை. மேலாக நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

இதற்கு தேவையானது புதினா கலந்த டூத் பேஸ்ட். இந்த வெண்புளிகளை நீக்க தேவையானவற்றை பார்க்கலாம்

தேவையானவை :
புதினா கலந்த டூத் பேஸ்ட் – பட்டானி அளவு உப்பு – ஒரு சிட்டிகை ஐஸ் துண்டுகள் – 1

டூத பேஸ்டிலுள்ள புதினா சரும துவாரங்களை திறக்கும். உப்பு சருமத்திலுள்ள வெண்புள்ளிகளை அழுக்குகளை இறந்த செல்களை வெளியேற்றும்.

புதினா டூத் பேஸ்ட்டில் சிறிது உப்பு கலந்து, வெண்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தேயுங்கள். 5 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். பின்னர் ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியினால் கட்டி, அந்த பகுதிகளில் மசாஜ் செய்யுங்கள்.

ஐஸ் கட்டி சரும துவாரங்களை மூடச் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். வாரம் மூன்றுமுறை செய்யலாம். இதனால் விரைவில் வெண்புள்ளிகள் மறைந்துவிடும்

paste 15 1468581778

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button