சைவம்

வெங்காயப் பூண்டுக் குழம்பு செய்வது எப்படி

வயிற்று உபாதைகளுக்கு இந்த வெங்காயப் பூண்டுக் குழம்பை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வெங்காயப் பூண்டுக் குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பூண்டு – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவைக்கேற்ப
சாம்பார்த்தூள் – 2 ஸ்பூன்

தாளிப்பதற்கு:

கடுகு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்
எண்ணெய் – ஒரு குழிக் கரண்டி (50 மில்லி)

செய்முறை :

* வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

* புளி, உப்பை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொண்டு, சாம்பார் பொடி சேர்த்து கலக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கியதும் கரைத்துள்ள புளித்தண்ணீரை அதில் ஊற்றி கொதித்துக் கெட்டியானதும் (எண்ணெய் மேலே மிதந்து வரும் தருணத்தில்) குழம்பை இறக்கி விடவும்.

* சுவையான சத்தான வெங்காயப் பூண்டுக் குழம்பு ரெடி.201611240742419437 onion garlic kulambu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button